நெடுமாறனுடன் ராமதாஸ்-ரஜினி சந்திப்பு
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர், தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனைச் சந்தித்து, அவர்மீண்டும் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து நெடுமாறன் காட்டுக்குச் செல்லலாம் என்று தெரிகிறது.
இதுகுறித்த விவரம் வருமாறு:
வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக, நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபால், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்,சுகுமாறன், பேராசிரியர் கல்யாணி ஆகியோர் தூதர்களாக காட்டுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர்.
இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் தமிழக, கர்நாடக அரசுகள் செய்து வந்த நிலையில், தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத்தொடரில் சட்டசபைஎதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், நெடுமாறன் காட்டுக்குச் செல்லக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி நெடுமாறன் தேச விரோதி, பிரிவினைவாதி. அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்தப் பேச்சு தூதர்கள்குழுவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இதையடுத்து நெடுமாறன் காட்டுக்குச் செல்ல மாட்டேன் என்று அறிக்கை வெளியிட்டார். அவர் காட்டுக்குச் செல்ல வில்லையென்றால் நாங்களும்காட்டுக்குச் செல்ல முடியாது என்று பிற தூதர்கள் மூவரும் அறிவித்தனர்.
இதற்கிடையே, நெடுமாறனை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நடிகர் ரஜினிகாந்த், மற்றும் நடிகர் அம்பரீஷ்ஆகியோர் இறங்கியுள்ளனர்.
அவர்கள் மூவரும் வியாழக்கிழமை காலை நெடுமாறனைச் சந்தித்து அவர் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்துநெடுமாறன் காட்டுக்குச் செல்லலாம் என்று தெரிகிறது. கர்நாடக திரைப்பட வர்த்தக சபையினரும் அவசரமாக சென்னை சென்றுள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications