என்ன ஆச்சு அமெரிக்காவுக்கு?
வாஷிங்டன்:
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி யார் என்பதை புளோரிடாவில் நடக்கும் மறுவாக்கு எண்ணிக்கை தான்நிர்ணயிக்க உள்ளது.
25 எலக்டோரல் வாக்குகள் கொண்ட புளோரிடா தான் அடுத்த ஜனாதிபதியை முடிவு செய்ய உள்ளது. இருவரும்கிட்டத்தட்ட சம பலத்தில் உள்ள நிலையில் புளோரிடாவின் 60 லட்சம் வாக்குகள் மீண்டும் எண்ணப்படுகின்றன.இந்த மறு எண்ணிக்கை வியாழக்கிழமை இரவு அல்லது வெள்ளிக்கிழமை காலை தான் முடிவடையும்.
அதுவரை யார் ஜனாதிபதி என்பது முடிவாகாது. அதுவரை அல்கோரும், ஜார்ஜ் புஷ்சும் தூங்கவும் முடியாது. வரும்20ம் தேதி அடுத்த ஜனாதிபதி பதவி ஏற்றாக வேண்டும் என்ற நிலையில் குழப்பத்தில் தவிக்கிறது அமெரிக்கா.
ஜனநாயகக் கட்சி வென்றால் தங்களுக்கு நல்லது என நினைக்கும் பிற நாடுகளும் குடியரசுக் கட்சி வென்றால் தான்நல்லது என நினைக்கும் நாடுகளும் கூட அமெரிக்காவுடன் சேர்ந்து பரிதவித்து வருகின்றன.
நான் நிச்சயம் வெல்வேன் என்கிறார் குடியரசுக் கட்சியின் வேட்பாளரும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகஅறிவிக்கப்பட்டு இப்போது குழப்பத்தில் சிக்கித் தவிப்பவருமான ஜார்ஜ் புஷ்.
புளோரிடாவில் கிடைக்கும் 25 எலெக்டோரல் வாக்குகள் தான் தேர்தலில் வெல்வதற்குத் தேவையான 270எலெக்டோரல் காலேஜ் வாக்குகளை நிர்ணயிக்க உள்ளன. யார் 270 எலெக்டோரல் காலேஜ் வாக்குகளைப்பெறுகிறார்களோ அவர் தான் அடுத்த ஜனாதிபதி.
இந்த மறுவாக்கு எண்ணிக்கையை அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர்களான ஜேம்ஸ்பெக்கர் (புஷ் ஆதரவாளர்) மற்றும் வாரன் கிருஸ்டோபர் (கோர் ஆதரவாளர்) ஆகியோர் கண்காணித்துவருகின்றனர்.
முதலில் எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் அல்கோரை விட புஷ் வெறும் 1,800 வாக்குகள் தான் அதிகம்பெற்றிருந்தார். வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்ததால் புளோரிடா மாகாண தேர்தல் விதிப்படி மறுவாக்குஎண்ணிக்கை நடக்கிறது. மேலும், மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என அல்கோரும் கோரிக்கைவிடுத்திருந்தார்.
மேலும் முதலில் நடந்த வாக்கு எண்ணிக்கையில் தபால் மூலம் வந்த வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. உலகின் பல பகுதிகளிலும் உள்ள அமெரிக்க பொதுமக்கள், ராணுவ வீரர்கள், தூதரகஊழியர்கள் ஆகியோரின் வாக்குகள் தபால் மூலமாகவே அமெரிக்காவை வந்தடையும். உலகம் முழுவதும்இருந்தும் இவை வந்து சேர 8 நாட்கள் வரை ஆகலாம். இப்போது வாக்கு வித்தியாசம் மிக மிகக் குறைவானதாகஇருப்பதால் இந்த தபால் வாக்குகளும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுவிட்டன.
இப்போது நடக்கும் மறு வாக்கு எண்ணிக்கையிலும் இரு வேட்பாளர்களும் சம பலத்தில் வென்றால், தபால்வாக்குகள் முழுமையாக வந்து சேர்ந்து அவையும் எண்ணப்படும் வரை யார் ஜனாதிபதி என்பது முடிவாகாது.
இந்த குழப்பம் போதாது என்று புளோரிடாவில் நடந்த வாக்குப் பதிவு தொடர்பாகவும் பல புகார்கள்எழுந்துள்ளன. வாக்குச் சீட்டில் அல்கோர், ஜார்ஜ் புஷ்ஷின் பெயர்களும் கட்சியின் பெயர்களும் இடம் பெற்றுள்ளவிதம் மிகவும் குழப்பமானதாக இருந்ததாகவும் இதனால் மீண்டும் வாக்குப் பதிவு நடத்த வேண்டும் எனவும் கோரிவழக்கும் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.
அமெரிக்க அளவில் பார்த்தால் புதன்கிழமை அல்கோர் 49 சதவீத வாக்குகளையும் புஷ் 48 சதவீத வாக்குகளையும்பெற்றிருந்தனர். ஆனால், புளோரிடாவில் புஷ் வென்றால் அவருக்கு தேசிய அளவில் தேவைப்படும் 270எலெக்டோரல் காலேஜ் வாக்குகள் கிடைத்துவிடும்.
1888ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இப்படி ஒரு குழப்பம் ஏற்பட்டதேயில்லை. 43வது ஜனாதிபதியைத்தேர்ந்தெடுப்பதில் அமெரிக்கா இப்போது குழப்பத்தில் சிக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications