அரசு பஸ்-லாரி மோதலில் 7 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி:
ஓசூரில் இருந்து சென்ற அரசு பஸ்சும், லாரியும் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் 7 பேர் இறந்தனர்.
கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி கூட்டுரோடு அருகே அரசு பஸ்சும், லாரியும் மோதிக்கொண்டன. இந்த விபத்து வியாழக்கிழமை பிற்பகல் 2மணிக்கு நடந்தது.
இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒரு பெண் குழந்தை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வகையில் இறந்தது.
பலியானவர்களில் பெண்கள் 3 பேர். 2 பேர் குழந்தைகள். இவ்விபத்தில் மேலும் 23 பேர் காயம் அடைந்தனர்.
இறந்தவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை. விபத்தில் காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications