தொடங்கியது சுவர்ண பூமி திட்டம்: ஜஸ்வந்த் சிங் பங்கேற்றார்
வியன்டைன்:
இந்தியாவிற்கும் 5 தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்குமிடையே புதிய சரித்திரத்தை துவக்க இருக்கும் கங்கா -மெகாங்க் சுவர்ணபூமி திட்டம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் முன்னிலையிலும், மேலும் இதில் பங்குபெற்றுள்ள அயல் நாட்டு சுற்றுலா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் முன்னிலையிலும்வெள்ளிக்கிழமையன்று துவங்கியது.
இந்த விழாவில் கம்போடியா, லாவோஸ், மியான்மார், தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாடுகளைச் சேர்ந்தஅமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
லாவோ பிளாசா ஹோட்டலில் நடந்த துவக்க விழாவில் ஜஸ்வந்த் சிங் பேசுகையில் இந்தியாவிற்கும் கங்கா--மெகாங்க் பகுதியில் உள்ள நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் கலாச்சார உறவுகளை நினைவு கூர்ந்தார்.
அவர் மேலும் பேசியதாவது:
விழாவில் பங்கேற்றுள்ள நாடுகள் இயற்கை வளத்தில் சிறந்து விளங்குகின்றன. இந்த நாடுகள் அனைத்தும்ஒன்றிணைந்தால் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் கல்வித்துறையில் சிறந்த முன்னேற்றம் காணலாம். தகவல் தொடர்புதுறையிலும் வளர்ச்சி பெறலாம். மேலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் காணலாம்.
இந்தியா இந்த புதிய அமைப்பில் பங்கெடுப்பது குறித்து ஜஸ்வந்த் சிங் மகிழ்ச்சி தெரிவித்தார். தென் கிழக்கு ஆசியநாடுகளுடன் இந்தியா நட்புறவு கொண்டிருப்பது இந்தியாவின் அயல்நாட்டு கொள்கையின் சிறப்பைஎடுத்துக்காட்டுவதாக விளங்குகிறது.
ஏசியான் அமைப்பில் உள்ள நாடுகளுடன் இந்தியா இணைந்தது மெகாங்க் திட்டத்தின் மேம்பாட்டிற்கு உதவும் எனஉறுதி அளிக்கிறேன். ங்கா - மெகாங்க திட்டத்தை எதிர்கால வளர்சிக்காக அர்ப்பணிக்கிறேன் என்றார்.
அமைச்சர்கள் அனைவரும் இரண்டு சுற்று பேச்சு வார்த்தை நடத்தியபின் வெள்ளிக்கிழமை மாலை வியன்டைன்உறுதி மொழி குறித்து கூட்டறிக்கை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
யு.என்.ஐ.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications