பிஜித் தீவில் 18 மாதங்களுக்குள் தேர்தல்: பிரதமர் அறிவிப்பு
லண்டன்:
பிஜித் தீவில் அடுத்த 18 மாதங்களுக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று இடைக்காலப் பிரதமர் லைசேனியா குவாரசே வெள்ளிக்கிழமைதெரிவித்தார்.
பிரதமர் லைசேனியா குவாரசே இதுகுறித்து லண்டனிலிருந்து வெளியாகும் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி:
பிஜித் தீவில் தற்போது இடைக்கால ஆட்சி நடந்து வருகிறது. டிசம்பர் 2001 க்குள் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.
பின்னர் 2002 ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும். பொதுத்தேர்தல் மார்ச் அல்லது ஜூன் மாதம் நடக்கும்.
புதிய அரசியலமைப்புச் சட்டம், பிஜித் தீவின் பூர்வீகக் குடிமக்களும், இங்கு வாழும் இந்தியர்களும் பயன்பெறும் வகையில் இருக்கும். இங்கு இந்தியர் ஒருவர்பிரதமராக இருப்பதை பூர்வீக குடிமக்கள் யாரும் விரும்பவில்லை.
புதிய அரசியலமைப்புச் சட்டப்படி, பிஜியில் பூர்வீக குடிமக்களே பிரதமர் பதவியிலும், அதிபர் பதவியிலும் அங்கம் வகிப்பார்கள் என்று தனது பேட்டியில்குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாகப், பிஜி தீவில் ஆட்சி நடத்த இந்தியப் பிரதமர் மகேந்திர செளத்திரியை, கலகக் கும்பல் தலைவர் ஜார்ஜ் ஸ்பைட் சிறைவைத்தார். அவரதுஅமைச்சரவை சகாக்களும் சிறை வைக்கப்பட்டனர்.
ராணுவத்துக்கும், கலகக்கும்பலுக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தைக்குப்பின் பிரதமர் மகேந்திர செளத்ரி விடுவிக்கப்பட்டார். பின்னர் ஜார்ஜ் ஸ்பைட்கைது செய்யப்பட்டார். அவர் மேல் தேச விரோத வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தற்போது பிஜித்தீவில் இடைக்கால அரசு ஆட்சி நடத்தி வருகிறதுஎன்பது நினைவிருக்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications