நெடுமாறனைக் காட்டுக்கு அனுப்பத் துடிக்கும் தலைவர்கள்
சென்னை:
நெடுமாறன் தனது முடிவை மறுபரிசீலனை செய்து காட்டுக்குச் சென்று ராஜ்குமாரை மீட்டு வர வேண்டும் என்று எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
ராஜ்குமாரை மீட்க தூதுக் குழுவினர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு இப்போது தடங்கல் ஏற்பட்டுள்ளது வருந்தத்தக்கது. கர்நாடக மாநிலத்தில் வாழும்தமிழர்கள், கர்நாடகத்தில் வாழும் கன்னடர்கள் வாழ்வும், நலனும் சம்பந்தப்பட்ட பிரச்சனை இது.
இந்நிலையால் சிலரால் எழுப்பப்பட்டுள்ள விமர்சனத்தால் மனச் சங்கடத்தில் தன் மனிதாபிமான தூதுப் பயணத்தை நெடுமாறன் மேற்கொள்ளப்போவதில்லை என்று அறிவித்திருப்பது துர்பாக்கிய வசமானது.
தமிழக முதல்வர் கருணாநிதியும், கர்நாடக முதல்வரும் இப்பிரச்சனையை முள்ளில் கிடக்கும் துணியை மெல்ல எடுப்பது போல லாவகமாக கையாண்டுசுமுகமாக பிரச்சனையை தீர்க்க அனைத்து முயற்சிகளையும் பெரும்பாலோர் ஏற்கத்தக்க வகையில் எடுத்து வருகின்றனர்.
மனிதாபிமானத்தோடு அணுக வேண்டிய பிரச்சனையை அரசியல் நோக்கத்தோடு யார் அணுகினாலும் இரு மாநில மக்களும், நிச்சயம் ஏற்கமாட்டார்கள். பிரச்சனைகளை அலசி ஆராய இது நேரமல்ல. ராஜ்குமார் மற்றும் அவரோடு கடத்தப்பட்டவரை உடனடியாக மீட்பதே இப்போதையஅவசர அவசிய தேவையாகும்.
எனவே நெடுமாறன் கோபால் உட்பட தூதுக் குழுவினர் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.தூது பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டுராஜ்குமாரை மீட்டு வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் திருநாவுக்கரசு.
முன்னதாக, நெடுமாறன் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியதும், அவர்நேரில் சென்று நெடுமாறனை சந்தித்து இதுபற்றிக் கேட்டுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல் தமிழக முதல்வர் கருணாநிதியும், நெடுமாறன்தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications