புதிய நெருக்கடியில் பா.ஜ.க.
டெல்லி:
1985 ம் ஆண்டில் குஜராத்தில் போலீஸ் காரர் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான, இணை அமைச்சர் ஹரின் பதாக் கூட்டணியில் இருக்கக்கூடாது என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளதால் பாரதிய ஜனதாக் கட்சி புதிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
இதனால் வாஜ்பாய் இவ்விஷயம் குறித்து உள்துறை அமைச்சர் அத்வானியிடம் ஆலோசனை நடத்தலாம் என்று தெரிகிறது.
1985 ம் ஆண்டு குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் வேலைவாய்ப்பில் மத்திய அரசின் இட ஒதுக்கீடு குறித்து ஒரு குழு தர்ணா நடத்திக் கொண்டிருந்தது.அப்போது அந்த தர்ணா திடீரென்று வன்முறையாக வெடித்தது. இச்சம்பவத்தில் போலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இக்கொலைச் சம்பவத்தில், பாரதிய ஜனதா கட்சியிலுள்ள இணை அமைச்சர் ஹரின் பதாக் மற்றும் குஜராத் சுகாதாரத் துறை அமைச்சர் அசோக் பட்ஆகிய இருவரும் இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மூத்த காங்கிரஸ் பிரமுகர் நரேந்திர மோதி கூறுகையில், இதற்காக ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் எதுவுமில்லை. இது அரசியல்நோக்கத்துடன் காங்கிரஸ் கட்சியினர் வேண்டுமென்றே போர்க்கொடி தூக்கியுள்ளனர் என்றார்.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் 20 ம் தேதி நடக்கிறது. அப்போது பதாக் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூட்டணிக் கட்சித்தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் எதிர்ப்புக்குரல் எழுப்பலாம் என்று தெரிகிறது.
மேலும், ஊழல் வழக்கில் தொடர்புடைய முத்தய்யா, பூட்டாசிங் ஆகியோர் உடனடியாக ராஜினாமா செய்தனர். இதே போல் போலீஸ் வழக்கு பதிவுசெய்யப்பட்ட ஒருவர் அமைச்சரவையில் இருக்கக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications