அமாவாசையின் காதல்கள்
சென்னை:
இரண்டு பெண்களை ஏமாற்றி விட்டு மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற அமாவாசையை சினிமா ஸ்டைலில் போலீஸார் மணமேடையில் வைத்து கைதுசெய்தனர்.
திருச்சி காட்டுப்புத்தூர் அருகே கொடுவானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அமாவசை (31). கூலித் தொழிலாளி. இவருக்கும் முறைப் பெண் சரசுவுக்கும் 6ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதால், ஊர் பஞ்சாயத்தை கூட்டி பிரிந்து விட்டனர்.
அதன் பின்னர் கல் உடைக்கும் வேலைக்காக சேலம் கொண்டலாம் பட்டிக்கு வந்தார் அமாவாசை. அப்பகுதியை சேர்ந்த மாது என்ற பெண்ணைசந்தித்தார். இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஏற்கனவே திருமணம் ஆகிய தகவலை மறைத்து விட்டு, அப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
மூன்றாண்டுகளுக்கு பின்னர் அமாவாசைக்கும் மாதுவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதனால் மாதுவை அம்போவென விட்டு விட்டுமீண்டும் திருச்சிக்கு சென்று விட்டார் அமாவாசை.
அங்கே சும்மா இருக்கவில்லை. மணச்சநல்லூரை சேர்ந்த காபித்தூள் வியாபாரியின் மகள் லட்சுமிக்கு காதல் வலை விரித்தார். அவரிடமும் தான்திருமணமாகாத இளைஞர் என்று பொய் சொன்னதால் அவரை நம்பினார் லட்சுமி.
பின்னர் பெற்றோர் சம்மத்ததுடன் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வெள்ளிக்கிழமை மணச்சநல்லூரில் உள்ள கோவிலில் திருமணம் நடக்கவிருந்தது.
இதற்கிடையில் இந்த தகவல் சேலத்தில் இருந்த இரண்டாவது மனைவி மாதுவுக்கு தெரிய வந்தது. அவர் உடனடியாக சேலத்தில் இருந்து கிளம்பி வந்தார்.மணச்சநல்லூர் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார் மாதுவுடன் சென்றனர். திருமண கோலத்தில் தாலி கட்ட தயாராக இருந்த அமாவாசையை கைது செய்தனர். உண்மையை அறிந்தலட்சுமி மாதுவுக்கு நன்றி தெரிவித்தார்,
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications