இந்தியா அணு குண்டு வெடித்தது ஏன்?- புதிய தகவல்கள்
டெல்லி:
பாகிஸ்தானிடமிருந்து போர் மிரட்டல் இருந்ததால் தான் அணு குண்டு சோதனை நடத்தினோம் என இந்தியா இப்போதுகூறியுள்ளது.
1998ல் இந்தியா நடத்தி அணு குண்டு சோதனைக்கு உள்நாட்டில் பெரும் வரவேற்பும் வெளிநாடுகளில் கடும கண்டனமும்எழுந்தது. இந்தியா நடத்த அணு குண்டு சோதனைகளை ஒட்டி பாகிஸ்தானும் அணு குண்டு சோதனை நடத்தியது.
இந் நிலையில் இந்தியா ஏன் திடீரென் அணு குண்டு வெடித்தது என்பதற்கான விவரம் இப்போது வெளியாகியுள்ளது. இந்தியபாதுகாப்பு ஆலோசகரான பிரிஜேஷ் மிஸ்ரா ஸ்டார் நியூஸ் சேனலில் அளித்த பேட்டியில் இதைக் கூறியுள்ளார்.
இந்தப் பேட்டி ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகிறது. பேட்டி விவரம்:
1998ம் ஆண்டு ஏப்ரலில் பாகிஸ்தான் காவ்ரி ஏவுகணையை சோதனை செய்தது. இதற்கு இந்தியா பதில் சொல்லியே ஆகவேண்டிய நிலையில் இருந்தது. பாகிஸ்தானின் அச்சுருத்தலை தர்க்கத் தான் அணு குண்டு வெடித்தோம்.
பதவி ஏற்ற இரண்டு வாரத்தில் இந்தியாவின் அணு குண்டுத் திட்டம் குறித்து பிரதமர் வாஜ்பாய் அதிகாரிகளுடன் ஆலோசனைநடத்தினார். ஆனால், அதை அப்படியே விட்டுவிட்டார். ஆனால், ஏப்ரலில் காவ்ரி ஏவுகணையை பாகிஸ்தான் சோதித்தது.அவர்களின் பேச்சும் செயலும் போருக்கு ஆயத்தம் செய்வதை உறுதி செய்தது.
அப்போது தான் அணு குண்டு சோதனை நடத்த பிரதமர் உத்தரவிட்டார். அணு குண்டு இல்லாமல் இன்றைய உலகில் நம்மையாருமே கணக்கில் எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என்பது தான் எனது தனிப்பட்ட கருத்து.
அணு ஆயுதப் பரவல் சட்டம் ஒருதலைப்பட்சமானது. இதில் கையெழுத்திட்டால், உலகின் 5 வல்லரசுகள் மட்டுமே அணு ஆயுதம்வைத்திருக்கும் நிலை உருவாகும். நாமெல்லாம் அணு ஆயுதங்கள் இல்லாத ஒதுக்கப்பட்ட நாடுகள் வரிசையில் உட்காரவேண்டியிருக்கும். இதனால், தான் இதில் கையெழுத்திட இந்தியா தயாராக இல்லை.
கார்கிலில் பாகிஸ்தான் ஊடுருவியது குறித்து ஆராய்ந்த கே. சுப்பிரமணியம் சமர்பித்த அறிக்கையை அமைச்சர்கள் குழுஆராயந்து வருகிறது. நாட்டிற்கு ஒரு சுதந்திரமான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இருக்க வேண்டும் என சுப்பிரமணியம் கமிட்டிபரிந்துரைத்துள்ளது.
அணு குண்டு சோதனையின் ஒவ்வொரு கட்டமும் என்னிடம் விளக்கப்பட்டது என்றார் மிஸ்ரா.
வட கொரியாவின் உதவியோடு காவ்ரி ஏவுகணையைத் தயாரித்து சோதனை செய்த பாகிஸ்தான், இதைக் கொண்டு இந்தியாவின்பல நகரங்களைத் தாக்க முடியும் எனக் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications