ராஜ்குமாருக்காக சபரிமலைக்கு பாத யாத்திரை
பெங்களூர்:
கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமார் விரைவில் நலமுடன் திரும்ப வேண்டி பெங்களூரிலிருந்து சபரிமலைக்கு பாதயாத்திரை செல்லும்ஐயப்ப பக்தர்கள் பூஜையில் நடிகர் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார் கலந்து கொண்டார்.
சிவாஜிநகர் வீனஸ் செக்யூரிட்டி காலனியில் வசித்து வருபவர் துளசிதாஸ் (45). இவர் சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டநடிகர் ராஜ் குமார் நலமுடன் திரும்ப பெங்களூரிலிருந்து சபரி மலைக்கு பாதயாத்திரையாக செல்கிறார். இதுதொடர்பாக இவர்நடத்திய ஐயப்ப பூஜையில் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார், ராஜ்குமாரின் மருமகன் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
துளசிதாசுடன் அவரது மகன் பரத்தும், நண்பர் யோகேஷும் இருமுடி சுமந்து பாதயாத்திரையாக சபரி மலை புறப்பட்டுச்சென்றனர்.
ஒசூர், ராயக்கோட்டை, பாலக்கோடு, தொப்பூர், சேலம், திருச்சி, திண்டுக்கல், கமுதி, வண்டிப்பெரியார், பீர்மேடு, எரிமலை,பம்பை வழியாக சபரி மலை சன்னிதி செல்வார்கள்.
இதுகுறித்து துளசிதாஸ் கூறுகையில், நான் முன்பு சைக்கிள் மூலம் சபரிமலை சென்றுள்ளேன். இப்போது என் நண்பர்யோகேஷுடனும். என் 10 வயது மகனுடனும் கால் நடையாக செல்கிறேன்.ராஜ்குமார் நலமுடன் திரும்புவதற்காக இந்தபிரார்த்தனை. நாங்கள் சபரிமலை சென்றடைய 25 நாட்கள் ஆகலாம்.
வழியில் உள்ள திருந்தலங்களில் பூஜைகள் செய்வோம். திருச்சி சமயபுரத்தில் சிறப்பு அர்ச்சனை செய்வோம். இரவு எங்குதங்குவோம் என தெரியாது. ஆண்டவன் எங்கு தங்குவது என்பதை முடிவு செய்வார் என்றார். இவர்களுடன் துணி மற்றும்பொருட்களுடன் மூன்று சக்கர ரிக்ஷாவும் செல்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications