கோயில் நிலத்தை அபகரித்த முன்னாள் எம்.பி.
சென்னை:
கரூரில் கோயில் நிலத்தை தன் பெயரில் பட்டா போட்டுக் கொண்ட, முன்னாள் எம்.பியிடமிருந்து நிலம் மீட்கப்பட்டுள்ளதாகமாநில அறநிலையத் துறை அமைச்சர் தமிழ்குடிமகன் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை சனிக்கிழமையன்று சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது தி.மு.க. உறுப்பினர் வாசுகி முருகேசன் கேட்டகேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: கருரிலுள்ள பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக 3 ஆயிரத்து 107 ஏக்கர் நிலம் உ ள்ளது. ஆனால்கையிருப்பில் இருப்பது வெறும் 10ஏக்கர் நிலம்தான்.
மீதமுள்ள நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது பற்றி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது, கரூர் முன்னாள்எம்.பி. ஒருவர் கோயில் நிலத்தை தன் பெயருக்கு பட்டா போட்டிருந்தது தெரிய வந்த்து. இது அரசால் ரத்து செய்யப்பட்டது.
கோயில் நிலத்தை தங்கள் பெயரில் பட்டா போட்டுக் கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவருக்குஅதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. திருவான்மியூர் மருதீஸ்வரர் கோயில் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றப்பட்டுவிட்டனர். நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கூறினார்.
கோவில் நிலத்தை சுட்ட முன்னாள் எம்.பி. யார் என்பதை அமைச்சர் தெரிவிக்கவில்லை.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications