காணாமல் போன ஹெலிகாப்டர் கண்டுபிடிப்பு
பூஜ் (குஜராத்):
குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் காணாமல் போன ஹெலிகாப்டர் திங்கள்கிழமை பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பயணம் செய்த 12 பேரில் 3பேரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போன இந்திய விமானப் படைக்குச் சொந்தமான எம்ஐ 8 ரக ஹெலிகாப்டர் திங்கள்கிழமை பிற்பகல் 2மணிக்கு நாலியா விமானப்படை தளம் அருகே கண்டு பிடிக்கப்பட்டது. இது இந்திய எல்லைக்குட்பட்ட பகுதியாகும்.
பாகிஸ்தான் தரப்பினர் ஹெலிகாப்டரை சுட்டிருக்கலாமோ என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஹெலிகாப்டர் விழுந்து கிடக்கும் பகுதிஇந்தியப் பகுதியாகும் என்பதால், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று தெரிகிறது.
குஜராத் தலைநகர் காந்திநகர் தென்மேற்கு விமான நிலையத்திலிருந்து, காணாமல் போன ஹெலிகாப்டரைக் கண்டுபிடிப்பதற்காக சிறிய ஹெலிக்காப்டர்அனுப்பப்பட்டது. தற்போது மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications