அசாருதீன் மீண்டும் "ஆப்சன்ட்"
சென்னை:
கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக சி.பி.ஐயால் குற்றம்சாட்டப்பட்டுள்ளவீரர்களிடம் சென்னையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய விசாரணைஅதிகாரி மாதவன் தொடர்ந்து 2-வது நாளாக விசாரணை நடத்தினார்.
மேட்ச் பிக்ஸிங் செய்ததாக சி.பி.ஐ. அறிக்யிைல் பெயர்குறிப்பிடப்பட்டுள்ளவர்களிடம் விசாரணை நடத்தி, அவர்கள் மீதான நடவடிக்கைகுறித்து முடிவு செய்ய கிரிக்கெட் வாரியம் தீர்மானித்தது. வீரர்களிடம் விசாரணைநடத்த முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் மாதவனையும் வாரியம் நியமித்தது.
சனிக்கிழமை விசாரணை துவங்கியது. முதல் நாள் விசாரணையில் அசாருதீன் கலந்துகொள்ளவில்லை. மனோஜ் பிரபாகர் மட்டும் கலந்து கொண்டார். ஞாயிற்றுக்கிழமைமீண்டும் விசாரணை நடந்தது. இதிலும் அசாருதீன் கலந்து கொள்ளவில்லை. ஆனால்பிற வீரர்களான நயன் மோங்கியா, அஜய் ஜடேஜா, முன்னாள் டாக்டர் அலி இராணிஆகியோர் விசாரணைக்கு வந்திருந்தனர்.
மோங்கியாவிடம் 5 மணி நேரம் விசாரணை நடந்தது. அதற்குப் பிறகு ஜடேஜா மற்றும்இராணியிடம் விசாரணை நடந்தது.
அசாருதீனுக்கு மேலும் 2 சம்மன்கள் அனுப்பப்படும். தொடர்ந்து அவர் வராவிட்டால்,அவர் மீது முறையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாதவன்.
இதற்கிடையே, விசாரணையில் கலந்து கொள்ள வந்த வீரர்களும், அலி இராணியும்,கிரிக்கெட் வாரியம் கொடுத்த வசதிகளை மறுத்துவிட்டனர். உணவு மற்றும்தங்குமிடத்திற்கான செலவுகளை அவர்களே பார்த்துக் கொள்வதாக தெரிவித்துவிட்டனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications