வங்கத்தை வென்றது இந்தியா
தாக்கா:
முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாடிய கிரிக்கெட் குழந்தை வங்கதேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திவெற்றி வாகை சூடியது இந்தியா.
டெஸ்ட் அந்தஸ்தைப் பெற்ற வங்கதேசம் தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் மோதியது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தஇந்த போட்டி, வங்கதேச தலைநகர் தாக்காவில் பங்கபந்து ஸ்டேடியத்தில் நடந்தது.
தான் ஒன்றும் குழந்தை அல்ல, ஓரளவு வளர்ந்து விட்டேன் என்று கூறுவது போல, முதல் இன்னிங்ஸில் இந்தியாவைஆச்சரியப்படுத்தியது வங்கதேசம். அனாயசமாக ஆடி 400 ரன்களைக் குவித்தது வங்கதேசம். அமினூல் இஸ்லாம் சதம் அடித்துவரலாற்றுப் புத்தகத்தில் தனது பெயரைப் பதிவு செய்து கொண்டார்.
இந்தியாவின் சுனில் ஜோஷி சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் ஆடிய இந்தியா 429 ரன்களுக்குஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸைத் துவக்கிய வங்கதேசம், முதல் இன்னிங்ஸில் காட்டிய நிதானத்தை இழந்து, 91ரன்களில் சுருண்டது.
ஜோஷி மீண்டும் ஜொலித்தார். 3 விக்கெட்டுகளைப் பறித்தார். முதல் இன்னிங்ஸில் வெறும் கையுடன் சென்ற ஸ்ரீநாத் 3விக்கெட்டுகளைத் தட்டினார். அகர்கருக்கு 2 விக்கெட்டுகள் கிடைத்தன. டெஸ்ட்டின் அனுபவத்தை டேஸ்ட் செய்தது வங்கதேசம்.
63 ரன்கள் எடுத்தால்வெற்றி என்ற எளிதான இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் துவக்கியது இந்தியா. தாஸ் 22ரன்களும், டிராவிட் 44 ரன்களும் எடுத்து இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வெற்றியைத் தேடித் தந்தனர்.
இந்த வெற்றி இந்தியாவுக்கும் மிக முக்கியமானது. மறக்க முடியாதது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்துள்ள டெஸ்ட்வெற்றி இது. 1993-ம் ஆண்டு இலங்கையில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு வெளிநாடுஒன்றில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.
அவ்வப்போது கறிவேப்பிலை போல பயன்படுத்தப்படும், நல்ல கிரிக்கெட்டரான சுனில் ஜோஷி இந்தப் போட்டியில் தனதுதிறமையை மீண்டும் நிரூபித்தார். 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 92 ரன்களையும் விளாசி, தான் ஒரு சிறந்த ஆல் ரவுண்டர்என்பதை நிரூபித்தார். இனிமேலாவது இவரை தொடர்ந்து அணியில வைத்திருக்க தேர்வாளர்கள் நினைப்பார்கள் எனநம்புவோம்.
அகர்கருக்கும் இது ஒரு நல்ல மேட்ச் ஆக இருந்திருக்கும். மீண்டும் அணிக்கு வந்துள்ள ஸ்ரீநாத்தும் இரண்டாவது இன்னிங்ஸில்சிறப்பாக பந்து வீசினார். புதிய பந்துவீச்சாளர் ஜாகிர் கானும் ஏமாற்றவில்லை. மொத்தத்தில் இந்தியாவுக்கு மறக்க முடியாதவெற்றி இது.
சுருக்கமான ஸ்கோர்:
முதல் இன்னிங்ஸ்:
வங்கதேசம் - 400.
இந்தியா - 429 (சுனில் ஜோஷி 92, கங்குலி 84, ரமேஷ் 58, கார்த்திக் 43, நைமூர் ரஹ்மான் 6 விக்கெட்).
இரண்டாவது இன்னிங்ஸ்:
வங்கதேசம் - 91 (ஹபிபுல் பஷர் 30, கலீத் மாசுத் 21, ஜோஷி 3 விக்கெட், ஸ்ரீநாத் 3 விக்கெட்).
இந்தியா - 64-1 (டிராவிட் 41, தாஸ் 22).
மேன் ஆப் தி மேட்ச் - சுனில் ஜோஷி.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications