தமிழ் நாடகத்தை எதிர்த்து ராஜ்குமார் ரசிகர்கள் கலாட்டா
மைசூர்:
கர்நாடக மாநிலம் மைசூரில் தமிழ் நாடகம் நடத்தப்பட்ட அரங்கத்திற்குள் புகுந்துவீரப்பனால் கடத்தப்பட்டுள்ள கன்னட நடிகர் ராஜ்குமாரின் ரசிகர்கள் கலாட்டாநடத்தினர்.
ராஜ்குமார் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் சில நாட்களுக்குகர்நாடகத்தின் சில பகுதிகளில் வன்முறையில் இறங்கினர். பின்னர் இது தணிந்தது.
தற்போது ராஜ்குமார் கடத்தப்பட்டு 100 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில்மீண்டும் ஆங்காங்கே கலாட்டாவில் இறங்கியுள்ளனர்.
மைசூர் கலாமந்திர் நாடக மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை தமிழ் நாடகம் ஒன்று நடந்துகொண்டிருந்தது. அப்போது அரங்கத்திற்குள் அமர்ந்திருந்த பெரும் திரளானராஜ்குமார் ரசிகர்கள் எழுந்து மேடையில் ஏறினர். பின்னர் ராஜ்குமாருக்குஆதரவாகவும், தமிழ் நாடகத்தை நடத்துவதை எதிர்த்தும் கோஷம் இட்டனர்.
கைகளில் கன்னடக் கொடியும், ஆவேசத்துடனும் அவர்கள் கோஷமிட்டதால் நாடகமன்றத்திற்குள் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது.மைசூர் ராஜ்குமார் ரசிகர்கள் சங்கத் தலைவர் தேசி கெளடா மற்றும் நிர்வாகிகள், நாடகஅரங்க நிர்வாகிகளைச் சந்தித்து நாடகத்தை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.உடனடியாக நாடகம் நிறுத்தப்பட்டது.
போலீஸார் விரைந்து வந்து ரசிகர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்துஅப்புறப்படுத்தினர்.
ஏற்கனவே, ராஜ்குமார் விடுதலையாகி வரும் வரை தமிழ்த் திரைப்படங்களைத்திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று ராஜ்குமார் ரசிகர்கள் மற்றும் திரைப்படத்துறையினர் கூறியிருந்தனர். அதன்படியே, ராஜ்குமார் கடத்தப்பட்டது முதல் தமிழ்ப்படங்கள் கர்நாடகத்தில் திரையிடப்படவில்லை.
தீபாவளி முதல்தான், தமிழ்ப் படங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கணக்கில்கொண்டு மீண்டும் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications