போலீஸ் உடையில் திருட வந்த 8 பேர் கைது
கோயம்பத்தூர்:
மத்திய ரிசர்வ் போலீஸ் உடையில் கொள்ளையடிக்க வந்த 8 கேரள நபர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.இவர்களிடமிருந்து செல்போன் உட்பட பயங்கர ஆயு தங்களைக் கைப்பற்றினர்.
கோயம்பத்தூர் மாவட்டம் கேரள எல்லையில் அமைந்துள்ளதால், கேரளாவிற்கும் தமிழகத்திற்கும் வர்த்தக தளமாகவிளங்குகிறது. இரண்டு மாநிலங்களுக்கும் இடையே உள்ள இந்த தொழில் நகரத்தில் நகை வியாபாரம் உட்பட இயந்திரபாகங்கள் விற்பனையும் நடந்து வருகிறது.
இந்நிலையில், தங்க நகை வியாபாரிகள் எடுத்துச் செல்லும் பல லட்சம் பணத்தை கொள்ளையடிக்க கேரளாவைச் சேர்ந்த சிலவாலிபர்கள் திட்டமிட்டனர். இந்த திட்டம் குறித்து கோயம்பத்தூர் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதன்படி கேரளாவில் இருந்து ஒரு கார் சிவப்பு சுழல் விளக்குப் பொருத்தப்பட்டு பேரூர் நோக்கி வருவதாகப் போலீசாருக்குத்தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து, பேரூர் பைபாஸ் ரோட்டில் போலீசார் தயாராக நின்றிருந்தனர். அப்போது ஒரு கார்மற்றும் அதனைத் தொடர்ந்து ஒரு மாருதிக் கார் ஆகியவை வந்தன.
ஒரு காரில் சிவப்பு சுழல் விளக்குப் பொருத்தப்பட்டிருந்தது. இந்த காரில் பயணம் செய்த அனைவரும் சி.ஆர்.பி.எப் போலீஸாரின்உடையில் இருந்தனர். போலீசார் இவர்களிடம் விசாரணை செய்தபோது சந்தேகத்திற்கிடமான வகையில் பதிலளித்தனர்.மலையாளத்தில் புரியாத வகையில் பதில் கூறியுள்ளனர். இதனால் பேரூர் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.
கார் முழுவதும் சோதனையிட்டனர். அப்போது காரில் இரும்புக் கம்பிகள், மிளகாய் பொடி ஆகியவை இருந்தன. தகவல்தொடர்பிற்காக செல்போனும் இருந்தது. போலீஸார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், மில்டன் (20), கே.கே உன்னிக்கிருஷ்ணன் (27), டி.என் பிஜு (29), எம்.எம்.முகமது, டி.எஸ் சாஜூ, டி. பி விஜயன், சங்கரன் குட்டி ((48), பைசூ ஆகிய 8 பேரும்கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்தது.
போலீஸ் உடையில் கொள்ளையடிக்கும் பயங்கரக் கொள்ளையர்கள் எனவும் தெரிந்தது. போலீசார் இவர்களைக் கைது செய்துஇரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர்.
8 பேரையும் பிடித்த போலீசாருக்கு கோவை கமிஷனர் ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications