கபில் தேவிடமும் விசாரணை .. மாதவன் முடிவு
சென்னை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கபில் தேவிடமும், மேட்ச் பிக்ஸிங்புகார் குறித்து விசாரிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்நியமித்துள்ள விசாரணை அதிகாரி கே.மாதவன் கூறியுள்ளார்.
கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சி.பி.ஐ விசாரணை அறிக்கையில் பெயர்குறிப்பிடப்பட்டுள்ளவர்களுடன் விசாரணை நடத்த கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்முடிவு செய்தது. முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் மாதவன் விசாரணை அதிகாரியாகநியமிக்கப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை தனது விசாரணையை மாதவன் துவக்கினார். இதுவரை மனோஜ் பிரபாகர்,அஜய் ஜடேஜா, நயன் மோங்கியா, பிசியோதெரபிஸ்ட் அலி இராணி ஆகியோரிடம்விசாரணை முடிந்துள்ளது. முன்னாள் கேப்டன் அஸாருதீன் இதுவரை ஆஜராகவில்லை.
இரண்டு நாட்கள் நடந்த விசாரணை குறித்து மாதவன் கூறுகையில், அஜய் சர்மாவிடம்டெல்லியில் வருகிற 14-ம் தேதி விசாரணை நடத்தவுள்ளோம்.
கபில்தேவிடமும் விசாரணை நடத்தவுள்ளோம். டெண்டுல்கரிடம் விவாதிக்கவும் எனக்குத்தயக்கமில்லை. தேவைப்பட்டால் அவரை சந்தித்து விளக்கம் கேட்பேன்.
அசாருதீன் என்னிடம் தொலைபேசியில் பேசினார். சி.பி.ஐ. விசாரணை அறிக்கையைப்பார்க்காமல் எப்படி விசாரணைக்கு வர முடியும் என்றார். அதற்கு நான் அறிக்கையை தரஏற்பாடு செய்கிறேன் என்றேன். ஆனால் அதற்குப் பிறகு அவர் என்னைத் தொடர்புகொள்ளவில்லை.
கிரிக்கெட் வீரர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான அறிக்கை 29-ம் தேதிக்குள்கிரிக்கெட் வாரியத்திடம் தரப்படும். கல்கத்தாவில் நடைபெறவுள்ள வாரிய பொதுக்குழுக்கூட்டத்தில் இதுகுறித்து விவாதித்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.
எதிர்காலத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தைத் தவிர்ப்பது தொடர்பான சில பரிந்துரைகளையும்அறிக்கையில் தரவுள்ளேன். நடுநிலையுடன் கூடியதாக எனது அறிக்கை இருக்கும். வாரியத்தலைவர் ஏ.சி.முத்தையாவுடனும் ஆலோசனை நடத்தி சில விளக்கங்களைக்கேட்டுள்ளேன்.
எனது அறிக்கையை பகிரங்கமாக வெளியிடுவது குறித்து வாரியம்தான் முடிவு செய்யவேண்டும் என்றார் மாதவன்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications