ஜெ. ஊழலை மக்கள் மறக்கவில்லை .. ஆர்.எம்.வீ.
கோவை:
தி.மு.க., அணி தான் வரும் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என கோவையில் எம்.ஜி. ஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் கோவையில் தெரிவித்தார்.
கோவையில் எம்.ஜி.ஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:
தமிழக அரசியலில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. தேர்தல் முடிந்து முடிவுகள் வெளிவரும்போது மக்களின் தெளிவான தீர்ப்பு வெளியாகும். இந்தமுடிவில் தி.மு.க.,அணி வெற்றி பெற்றிருக்கும்.
ஜெயலலிதா மீதுள்ள அதிருப்தி இன்னும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. தி.மு.க., அரசு கிராமப் புறங்களில் தன்னிறைவுத் திட்டங்களை முழுமையாகநிறைவேற்றியுள்ளது. ஜெ. ஆட்சியில் நாட்டில் நடந்த அராஜகங்கள், ஊழல்களை மக்கள் எளிதாக மறந்து விடவில்லை. மக்கள் இவற்றைமறக்கவும் மாட்டார்கள்.
கூட்டணி ஆட்சியைப் பொறுத்தவரை அந்த அணிக்கு தலைமை ஏற்கும் கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். கூட்டணியில் இடம் பெரும் கட்சிகள் முடிவு செய்யஇயலாது.
கடந்த 96ம் ஆண்டில் அ.தி.மு.க.,ஊழல் கட்சி எனக் கூறி த.மா.கா உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து நின்று போட்டியிட்டன. ஆனால் இப்போதுபா.ஜ.,வுடன் தி.மு.க., கூட்டணி யை மதவாதக் கூட்டணி எனக் கூறி, மதவாதக் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டதாகக் கூறி மக்கள் விரோதசக்தியான ஜெயலலிதாவை ஆதரிக்கின்றனர்.
எலியூருக்குப் பயந்து புலியூருக்குள் புகுந்து கொண்ட கதையாகத் தான் இது உள்ளது. மக்களால் நிராகரிக்கப்பட்ட ஊழல் சக்தியை ஏற்று அதற்கு மரியாதைதேடும் முயற்சியில் இந்தக் கட்சிகள் இறங்கியுள்ளன.
புரட்சித் தலைவரால் விரோதி என்று அடையாளம் காட்டப்பட்ட ஜெயலலிதாவை அரசியலை விட்டு ஒழிப்பதே எங்கள் லட்சியம். ஜெயலலிதாவின்மீதான வழக்குகளைத் தீவிரமாக விசாரணை செய்ய வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.
ஜாதிக் கட்சிகளைப் பொறுத்தவரை அவை இந்த தேர்தல் முடியும் வரை தான். பின்னர் அவை தானாக முடிந்து விடும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications