தமிழக வாகனங்களைத் தடுப்போம் .. கன்னட அமைப்பு
பெங்களூர்:
கர்நாடகத்திற்குள் நுழையும், தமிழக வாகனங்கள் கர்நாடக எல்லையில் தடுத்து நிறுத்தப்படும் என்று கன்னட அமைப்பு ஒன்றின் தலைவரும், கன்னடப்பத்திரிக்கையாளருமான ஜனகரே வெங்கட்ராமய்யா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நடிகர் ராஜ்குமார் கடந்த ஜூலை 30 ம் தேதி, சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டார். ராஜ்குமாரை மீட்கும் விஷயத்தில், தமிழக முதல்வர்கருணாநிதி, நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபால், தமிழ் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் ஆகியோரை விட்டால் வேறு வழியே இல்லை என்பதுபோல், கன்னட திரைப்பட கலைஞர்கள் நடந்து கொள்கின்றனர்.
கர்நாடகப் போலீஸாரின் திறமையைக் குறைத்து மதிப்பிடுவது போல் இவர்கள் நடந்து கொள்வது வேதனையளிக்கிறது. இதைக் கண்டிக்கும் வகையில்தமிழக வாகனங்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்படும்.
இந்து முறை காட்டுக்குச் சென்றுள்ள நெடுமாறன் வெறுங்கையோடு திரும்பி வந்தால் அரசு என்ன செய்யப் போகிறது?.
தமிழ்த் திரைப் படங்கள் கன்னடத்தில ரீமேக் செய்யப்படுவதற்கு கன்னடர்களே காரணம். இதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜனகரேவெங்கட்ராமய்யா.












Click it and Unblock the Notifications