வருமா ஜெருசேலம் சுவர்?
மாஸ்கோ:
பெர்லின் சுவர் போல ஜெருசேலத்தையும் இரண்டாகப் பிரித்து சுவர் அமைக்கலாம் என முன்னணி ரஷிய வெளியுறவுத் துறைநிபுணர் யோசனை தெரிவித்துள்ளார்.
பலவிதங்களிலும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஜெருசேலம் நகர் யாருக்கு என்பதில்தான் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும்இடையே சமீபத்தில் பிரச்சினை தீவிரமாகியுள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் இதுவரை 190-க்கும்மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் பாலஸ்தீனர்கள்.
இந்த நிலையில் இஸ்ரேல், பாலஸ்தீன பிரச்சினை தொடர்பாக ரஷிய வெளியுறவுத் துறை நிபுணர் அலெக்ஸி போகாதுரோவ் புதியயோசனையைத் தெரிவித்துள்ளார். ரஷிய செய்தி நிறுவனமான நவோஸ்திக்கு அளித்த கட்டுரையில், அலெக்ஸிகூறியிருப்பதாவது:
இஸ்ரேல், பாலஸ்தீன மோதல் உடனடியாக தவிர்க்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், பெரும் போராக இது மாறக் கூடும்.
ஜெர்மனியின் பெர்லின் நகரில் சுவர் அமைத்து பிரச்சினைக்கு முடிவு கட்டியது போல, ஜெருசேலம் நகரையும் பிரித்து சுவர்அமைக்கலாம்.இதன் மூலம் பிரச்சினைக்கு முடிவு கட்டலாம். இந்த யோசனையை இரு தரப்பினரும் பரிசீலிக்க வேண்டும்.
பெர்லின் சுவர் தற்போது இடிக்கப்பட்டு விட்டாலும் கூட, கிழக்கு, மேற்கு ஜெர்மனிக்கு இடையே இருந்த பிரச்சினையைத் தீர்த்து,மேற்கு ஐரோப்பா முழுவதும் அமைதி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது என்று கூறியுள்ளார் அலெக்ஸி.
1967-ம் ஆண்டு நடந்த போரில் இஸ்ரேலிடம், ஜெருசேலத்தை இழந்தது பாலஸ்தீனம். தற்போது, ஜெருசேலத்தின் கிழக்குப்பகுதியை தனக்குத் தர வேண்டும் என்று பாலஸ்தீனம் கோரி வருகிறது. ஜெருசேலத்தையே தனது சுதந்திர பாலஸ்தீன நாட்டின்தலைநகராக்கவும் அது திட்டமிட்டுள்ளது. பிரச்சினையைத் தீர்க்க ஜெருசேலத்தை யாருக்கும் சொந்தமில்லாத, சுதந்திர நகராகஅறிவிக்கலாம் என்ற வாடிகன் சிட்டியின் யோசனையையும் அது நிராகரித்து விட்டது.
இதற்கிடையே, இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை தொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சர் இகர் இவனோவ் ஒரு வார காலபயணம் மேற்கொள்ளவுள்ளார். எகிப்து, ஈராக், செளதி அரேபியா, இஸ்ரேல், பாலஸ்தீன நாடுகளுக்கு அவர் செல்லவுள்ளார்.திங்கள்கிழமை அவரது பயணம் துவங்குகிறது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications