சி.பி.ஐ. சோதனையில் டெல்லி அதிகாரிகளிடம் ரூ. 11 லட்சம் பறிமுதல்
டெல்லி:
டெல்லி வளர்ச்சி ஆணைய வீட்டு வசதிப் பிரிவு ஆணையர் வி.கே சிங்கால் மற்றும் பஞ்சாப் தேசிய வங்கி துணைத்தலைவரின் தனி உதவியாளர் ஆகியோரின் வங்கி லாக்கர்களைப் பரிசோதனை செய்து ரூ 11.5 லட்சம் பணத்தைக்செவ்வாய்க்கிழமை சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றினர்.
டெல்லி வளர்ச்சி ஆணையத்தில் பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் நடந்துள்ளதாகப் பல புகார்கள் வந்தன.இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் கடந்த நவம்பர் 10 ம் தேதி டெல்லி வளர்ச்சி ஆணைய இயக்குநர்கள் 2 பேர்மற்றும் 5 பிற அதிகாரிகள் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தினர்.
டெல்லி வளர்ச்சிக் கழக வீட்டு வசதிப் பிரிவு ஆணையர் சிங்கால், இயக்குநர் சர்மா, துணை இயக்குநர் அகுஜா,அதிகாரிகள் ஜாபிர் செளத்ரி, ஆர்.பி.சர்மா, ஜே.பி.சர்மா, சத்பீர் சிங் மற்றும் டெல்லி வளர்ச்சிக் கழக முன்னாள்ஊழியர் மதன் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின்போது, வி.கே.சிங்கால் வீட்டிலிருந்து ரூ 3.62 லட்சம் பணமும், 1120 கிராம் தங்கம் மற்றும்வைர நகைகளும் கைப்பற்றப்பட்டன. இவர் வீட்டில் நடந்த சோதனையில் ரூ 1.54 லட்சம் கணக்கில் வராத பணம்சிக்கியது.
இதேபோல, பஞ்சாப் தேசிய வங்கியின் பகர்கஞ்ச் பிரிவு துணைத் தலைவருடைய உதவியாளர் அசோக் கபூரின்வங்கி லாக்கரிலிருந்து ரூ 8.08 லட்சம் பணமும், 200 கிராம் தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டன.
அவரது வீட்டிலிருந்து ரூ 2.90 லட்சம் பணம், ரூ 6 லட்சத்திற்கான முதலீட்டுப் பத்திரங்கள், டெல்லி, ஷாலிமார் பாக்பகுதியில் 2 பிளாட்டுக்களுக்கான தஸ்தாவேஜூகள் கைப்பற்றப்பட்டன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications