மலையில் ஒரு திருமணம்
அரிகியூபா (பெரு):
பெரு நாட்டிலுள்ள மிஸ்டி மலையின் உச்சியில் 20 இளஞ் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.
அரிகியூபாவின் தெற்குப் பகுதியிலுள்ள 19, 106 அடி உயரமுள்ள மலை மிஸ்டி. ஞாயிற்றுக் கிழமை 20 ஜோடிகள் தங்கள் திருமணத்தை இந்த மலையின் உச்சியில்நடத்தி முடித்தனர். உலகிலேயே மிக உயரமான இடத்தில் நடந்த திருமணமாக இது கருதப்படுகிறது.
வித்தியாசமான இந்த திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஹூகோ யுன் கூறுகையில், திருமண ஜோடிகள் மலை உச்சியில் ஏறி தங்கள் திருமணத்தை முடித்துக்கொண்டனர். அனைத்து இடர்களையும் தாண்டி அவர்கள் மலையில் ஏறியது அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருந்த ஆத்மார்த்தமான அன்பை பரிசோதிப்பதுபோன்றதாகும் என்றார்.
திருமண ஜோடிகள் மலை உச்சிக்குச் செல்வதற்காக கடினமான ஷூக்களை அணிந்து சுமார் 12 மணி நேரம் நடந்து உச்சியை அடைந்தனர். அங்கு சென்றதும்,திருமணத்தின்போது அணியும், வெள்ளை உடைக்கு மாறினர். பின்னர், நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் திருமணம் செய்து கொண்டு, இனிப்புகளைப்பரிமாரிக் கொண்டனர்.
ஒரு ஜோடியால் மட்டும் மலை உச்சி வரை ஏற முடியவில்லை. இதனால் பாதியிலேயே அவர்கள் திரும்பிச் சென்றனர்.
சாதாரணமாக நடக்கும் திருமணங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு மலை உச்சியில் நடந்த இந்தத் திருமணம் அவர்கள் வாழ்வில் என்றும் மறக்கமுடியாதஅனுபவமாக இருக்கும் என்பது உண்மை.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications