"மாவீரனுக்கு அறிவுரை கூறிய "டாக்டர்
சென்னை:
ராஜ்குமாரைக் கடத்தி வைத்து செயல்படுவது கர்நாடகத்தில் வாழும் 30 லட்சம் தமிழர்களின் நலனை பாதிக்கின்ற விஷயமாக இருப்பதால் உடனேராஜ்குமாரை விடு விப்பதுதான் நல்லது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காட்டுக்குச் சென்றுள்ள நெடுமாறன் மூலம்வீரப்பனுக்குக் கொடுத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு 100 நாட்கள் தாண்டிய நிலையில் 6 வது முறையாக ராஜ்குமாரை மீட்பதற்காக காட்டிற்கு சென்றிருக்கிறார்கள்தூதர்கள். இந்த முறை கண்டிப்பாக ராஜ்குமாரை மீட்டு வந்து விடுவோம் என்று உறுதியாகச் சொல்லி விட்டு சென்றார்களாம் தூதர்கள்.
ஆறாவது முறையாக காட்டிற்கு தூதர்களை வீரப்பன் தரப்பிலிருந்து அழைக்க, தூதர்கள் தரப்பிலிருந்து மறுபடியும் பேச்சுவார்த்தை என்று எங்களால் வரமுடியாது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக இத்தனை நாள் காத்திருந்தோம். மிகத் தெளிவாக உச்ச நீதிமன்றம் தனது கருத்தை சொல்லி விட்டது. தடாகைதிகள், தமிழ் தீவிரவாதிகள் எவரையும் விடுவிக்க முடியாது என்று.
இந்த நிலையில் மறுபடியும் பேச்சுவார்த்தை என்று ராஜ்குமார் விடுதலை தாமதமாவது ஆரோக்கியமானதல்ல. ஆறாவது முறையாக காட்டிற்குவருகிறோம். ராஜ்குமாரைக் கண்டிப்பாக எங்களுடன் அனுப்பி வைப்பதானால் காட்டிற்கு வருகிறோம் என்று தூதர்கள் தரப்பிலிருந்து காட்டிற்குத் தகவல்சொல்லப்பட்டதாம்.
சரி வாருங்கள் என்ற பிறகுதான் காட்டிற்குச் செல்வதற்காக தயாரானார்கள் தூதர்கள். சட்டமன்றத்தில் நெடுமாறன் தேசத் துரோகி. அவரைக்காட்டிற்கு அனுப்புவது தவறு என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சோ.பால கிருஷ்ணன் குரல் கொடுக்க, ஆவேசமானார் நெடுமாறன்.சோ.பாவையே காட்டிற்கு அனுப்புங்கள் என்று கூறி விட்டு அமைதி காத்தார்.
தர்மசங்கடமான சூழ்நிலையில் முதல்வர் கருணாநிதி, ராஜ்குமாரின் மகன்கள் அனைவரும் நெடுமாறனை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினார்கள்.இறுதியில் நெடுமாறனும் ஒப்புக் கொண்டார்.
நெடுமாறனை சமாதானப்படுத்தியவர்களில் பாமக தலைவர் டாக்டர் ராமதாஸூம் ஒருவர். கடந்த வாரம் நெடுமாறனை சந்தித்துப் பேசியவர்.ராஜ்குமாரை மீட்பது என்பது உடனே நடக்க வேண்டிய விஷயம். எதிர்ப்புக்குரல்களை ஒதுக்கி விட்டு காட்டிற்குச் செல்ல வேண்டுகிறேன் என்று தமாகாவினரின் செயல்பாடுகள் பற்றியும் நெடுமாறனிடம் விமர்சித்துப் பேசினாராம் டாக்டர் ராமதாஸ்.
அந்த சந்திப்பிலேயே, டாக்டர் ராமதாஸ் வீரப்பனுக்கு கடிதம் ஒன்றைக் கொடுத்தார். இதை வீரப்பனிடம் கொடுங்கள் என்றவர் அந்தக் கடிதத்தில்வீரப்பனுக்கு "மாவீரன் என்றே குறிப்பிட்டு எழுதியிருந்தாராம்.
உங்களுடைய கோரிக்கைகள் எல்லாமே நியாயமானதுதான். அதற்காக ராஜ்குமாரைக் கடத்தி வைத்து செயல்படுவது கர்நாடகத்தில் வாழும் 30 லட்சம்தமிழர்களின் நலனை பாதிக்கின்ற விஷயமாக இருப்பதால் உடனே ராஜ்குமாரை விடுவிப்பதுதான் நல்லது.
உங்களது கோரிக்கைகள் நியாயமானதே. உங்கள் கோரிக்கைகளுக்காக நாங்கள் முன்னின்று ஜனநாயக முறையில் போரிடுவோம். இது என்னுடையஉறுதிமொழி. ராஜ்குமார் காட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு உங்கள் கோரிக்கைகளுக்காக நிச்சயம் குரல் கொடுப்போம். இதை உறுதிமொழியாகஏற்று ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுகிறேன் என்று உணர்ச்சிபூர்வமாக எழுதியிருந்தாராம் டாக்டர் ராமதாஸ்.
தூதர்களின் மீட்பு முயற்சியில் ராமதாஸின் கடிதமும் முக்கியமானது என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications