வைகோ மகள் திருமணம் .. கருணாநிதி நடத்துகிறார்
சென்னை:
சென்னையில் புதன்கிழமை நடக்கவுள்ள, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வின் மகள் திருமணத்தை முதல் அமைச்சர் கருணாநிதி நடத்தி வைக்கிறார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகள் கண்ணகி. கண்ணகிக்கும், ஜான் புஷ்பராஜூக்கும் புதன்கிழமை காலை 9 மணிக்கு சென்னை வடபழனி விஜயமஹாலில் திருமணம் நடக்கிறது.
திருமணத்திற்கு நீதிபதி எஸ். ரத்தினவேல் பாண்டியன் தலைமை தாங்குகிறார். மதிமுக அவைத்தலைவர் எல்.கணேசன், பொருளாளர் மு.கண்ணப்பன், துணைப் பொதுச்செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன், கவிஞர் குடியரசு ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
திருமணத்தை முதல்வர் கருணாநிதி நடத்தி வைக்கிறார். அனைவரையும் மதிமுக கலைத்துறை செயலாளர் எஸ்.தாணு வரவேற்றுப் பேசுகிறார். செய்தித்தொடர்பாளர் கே.எஸ்.ராதா கிருஷ்ணன் நன்றி கூறுகிறார்.
திருமண வரவேற்பு புதன்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது. திரு மணத்திற்கான ஏற்பாடுகளை வைகோ செய்து வருகிறார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications