கர்நாடகத்தில் தமிழ்ப் படங்களுக்கு வரிச்சலுகை
பெங்களூர்:
கர்நாடகத்தில் தமிழ் மற்றும் பிற கன்னட மொழி அல்லாத படங்களுக்கு வரிச்சலுகை அளிக்கும் சட்ட திருத்த மசோதா, கர்நாடக சட்டசபையில்செவ்வாய்க்கிழமை நிறைவேறியது.
கர்நாடகத்தில் கன்னடம் தவிர பிற மொழிப் படங்களுக்கு 100 சதவீத கேளிக்கை வரி அமலில் உள்ளது. இதைக் குறைக்க வேண்டும் என்று கர்நாடகதிரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், தமிழ், தெலுங்கு உள்பட பிறமொழிப் படங்களுக்கான கேளிக்கை வரியை 100 சதவீதத்திலிருந்து 80 சதவீதமாகக் குறைக்க வகை செய்யும்சட்ட திருத்த மசோதா, கர்நாடக சட்டசபையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் சிவண்ணா மசோதாவைத் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்க் கட்சியினர் மசோதா குறித்துக் கூறுகையில், கன்னட நடிகர் ராஜ்குமார்படங்கள் வெற்றிகரமாக ஓடும். ஆனால் அவரும் இப்போது காட்டில் இருக்கிறார். இந்த நிலையில் பிற மொழி படங்களுக்கு வரி குறைப்பது தவறு.
தமிழ் உள்பட பிறமொழிப் படங்களுக்கு 100 சதவீத வரியை 80 சதவீதமாகக் குறைப்பதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். இன்னும் 3மாதங்களில் புதிய பட்ஜெட் வரவுள்ளது. எனவே சட்டதிருத்த மசோதாவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறின.
இருப்பினும், அதைப் பொருட்படுத்தாது துணை சபாநாயகர் மனோகர் தாசில்தார் பிற மொழி படங்களுக்கு வரி குறைப்பு மசோதாவுக்கு அனுமதிகோரினார். இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
பின்னர், ஆளும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications