ராஜ்குமார், கருணாநிதியுடன் கிருஷ்ணா பேச்சு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
வீரப்பன் காட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட நடிகர் ராஜ்குமாருடன் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா தொலைபேசியில்தொடர்பு கொண்டு பேசினார்.
பின்னர் கருணாநிதியுடனும் கிருஷ்ணா ஆலோசனை நடத்தினார்.
இப்போது தொட்டகாஜனூரில் தங்கியுள்ள ராஜ்குமாருடன் கிருஷ்ணா பேசினார். அப்போது தன்னை விடுவிக்ககர்நாடக அரசு எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மேலும் தனக்கு சில நாள் ஓய்வு தேவைப்படுவதாகவும் ராஜ்குமார் அவரிடம் கூறினார்.
இதையடுத்து கருணாநிதியுடனும் கிருஷ்ணா பேசினார். ராஜ்குமார் விடுதலையையடுத்து எடுக்க வேண்டியநடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.












Click it and Unblock the Notifications