10-ம் வகுப்பு வரை தேர்வே கூடாது - அரசுக்குப் பரிந்துரை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பத்தாவது வகுப்பு வரை தேர்வுகளே இருக்கக் கூடாது, மாணவர்களின் படிப்புச்சுமையைக் குறைக்க வேண்டும், நடைமுறைக்குச் சாத்தியமான கல்வி முறை அமையவேண்டும்.

இவையெல்லாம் புதிய கல்விக் கொள்கையில் சேர்க்கப்பட வேண்டிய புதியஅம்சங்களாக, இதுதொடர்பாக அமைக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளது.

பள்ளிக் கல்விக்கான புதிய தேசியக் கொள்கையை உருவாக்குவது தொடர்பாக தேசியகல்வி ஆய்வு மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் மூத்த உறுப்பினர்கள் குழு பல்வேறுஆய்வுகள் நடத்தி பரிந்துரைகளைத் தயார் செய்துள்ளது.

செவ்வாய்க்கிழமை இந்த பரிந்துரைகள் வெளியிடப்பட்டன. மத்திய மனித வளத்துறைஅமைச்சர் முரளி மனோகர் ஜோஷி இக்கொள்கையை வெளியிட்டார்.

இந்தப் பரிந்துரைகளில் இடம் பெற்றுள்ள, மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரக் கூடியஅம்சங்கள்:

1. சி.பி.எஸ்.இ. முறையிலான கல்வித் திட்டத்தில், 10-வது வகுப்பு வரை தேர்வுகளேஇருக்கக் கூடாது. பாஸ், பெயில் என்ற முறையே இருக்கக் கூடாது. பாடத்திட்டம்நவீனப்படுத்தப்பட வேண்டும். நான்கு செமஸ்டர்களாக பாடத் திட்டம் மாற்றிஅமைக்கப்பட வேண்டும்.

2. ஒவ்வொரு மாணவர்களின் திறன் குறித்தும் தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வரவேண்டும். பள்ளிகளில் வைக்கப்படும் சிறு தேர்வுகளில் மாணவர்கள் பெறும் தரம்தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வர வேண்டும்.

3. பள்ளிக் கல்வியில் பாடத்திட்டங்கள் அனைத்தும் நடைமுறை வாழ்க்கையைஅடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும். ஏட்டுச் சுரைக்காயாகபாடத்திட்டங்கள் இருக்கக் கூடாது.

4. பள்ளி மாணவர்களின் புத்தக சுமையைக் குறைத்து அறிவு வளர்ச்சி, திறமைவளர்ச்சிக்கேற்றவாறு பாடத்திட்டங்கள்அமைய வேண்டும்.

5. அனைத்து சிறுவர், சிறுமியருக்கும் கல்வி கிடைக்க வகை செய்ய வேண்டும். சமூகஅறிவியல் பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேணடும். தங்களுக்குத்தேவையான பாடங்களைத் தேர்வு செய்து கொள்ளும் உரிமை மாணவர்களுக்குவழங்கப்பட வேண்டும்.

6. தேசியக் கல்விக் கொள்கையில் கூறியுள்ள வழிமுறைகளின்படி பள்ளிக் கல்வித்திட்டம் அமைய வேண்டும். இந்தக் கொள்கை 1986-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.1992-ம் ஆண்டு திருத்தப்பட்டது.

7. 4 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்குத் தங்களை மனரீதியாக தயார் செய்து கொள்ளும் விதத்தில், தயார் நிலை கல்வித் திட்டம்அமல்படுத்தப்பட வேண்டும்.

8. 1 மற்றும் 2-ம் வகுப்புப் பாடத்திட்டத்தில், ஏதாவது ஒரு மொழி, கணிதம்ஆகியவை இருக்கலாம்.

9. 3 முதல் 4-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில், சுற்றுச்சூழல் தொடர்பானபாடம் சேர்க்கப்படலாம்.

10. ஆரம்பப் பள்ளி மற்றும் செகண்டரி வகுப்புகளில் மூன்று மொழிகளைஅறிமுகப்படுத்தலாம். இதில், தாய் மொழி, ஆங்கிலம் மற்றும் ஒரு இந்திய மொழிகள்ஆகியவை அடங்கும். இதுதவிர, கணிதம், அறிவியல் தொழில்நுட்பம், சமூகஅறிவியல், வேலை தொடர்பான கல்வி, கலைக் கல்வி, கம்ப்யூட்டர் அறிவியல்ஆகியவற்றையும் இந்தப் பாடத்திட்டங்களில் சேர்க்கலாம்.

11. மேல் நிலைப் பள்ளி அளவில் நான்கு செமஸ்டர்களாக பாடத்திட்டம் அமையவேண்டும். கிரடிட் முறையை இங்கு சேர்க்கலாம். முதல் மூன்று செமஸ்டர்களில்நடத்தப்படும் தேர்வுகளை பள்ளிகளே நடத்தும். நான்காவது செமஸ்டர் தேர்வைபள்ளித் தேர்வு வாரியம் நடத்தும். மாணவர்களின் கற்கும் திறனைமேம்படுத்துவதற்காக இந்த கிரடிட் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

12. ஆரம்ப கால குருகுல கல்வியின் சிறப்பை உணர்ந்து அதேபோன்ற கல்விமுறையை அமல்படுத்த வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களிடம்உள்ள அனைத்துத் திறமைகளையும் பட்டை தீட்டும் வகையில் புதிய பாடத்திட்டம்அமையும்.

13. இந்தியை நாடு முழுவதிலும் அதிகாரப்பூர்வ மொழியாக அமல்படுத்த வேண்டும்.இதுதொடர்பான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்

14. ஆரம்பக் கல்வி நிலையில், இந்தியுடன், சமஸ்கிருதமும் கற்றுத் தரப்பட வேண்டும்.

இந்த வரைவுத் திட்டம் நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகள், பள்ளிக் கல்வித் துறைஇயக்குநர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களது ஒப்புதல் பெறப்படும். அதன்பிறகு திட்டம் இறுதி செய்யப்பட்டு 2002-ம் ஆண்டு முதல் அமல்படுத்த நடவடிக்கைஎடுக்கப்படும்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+