ஏப்ரலில் தமிழக சட்டசபைத் தேர்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறலாம் என்றுதலைமைத் தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் கூறியுள்ளார்.

சென்னையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மாநிலத் தேர்தல்அதிகாரிகளுடன் கில் புதன்கிழமை தேர்தல் குறித்து தனித்தனியாக ஆலோசனைநடத்தினார்.

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.அப்போது,ஜனவரியில் வாக்காளர் பட்டியல் திருத்தப்படுகிறது, பிப்ரவரி மாதம் மக்கள் தொகைக்கணக்கெடுப்பு நடக்கிறது, மார்ச்சில் பொதுத் தேர்வு வரும், எனவே ஏப்ரல் மாதம்தேர்தல் நடைபெறுமா என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு, என்னை விட நன்றாக யோசிக்கிறீர்கள் என்றார். பின்னர் தொடர்ந்து அவர்செய்தியாளர்களிடம் பேசுகையில், டெல்லியில் விரைவில் தேர்தல் ஆணையர்கள்கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது மாநில சட்டசபைத் தேர்தல் குறித்து முடிவுசெய்யப்படும். தேர்தல் தேதியை இப்போதே நான் கூற முடியாது.

என்னைச் சந்தித்த தமிழக ஆளுங்கட்சியான திமுகவின் பிரதிநிதிகள், தேர்தல் தேதிகுறித்து எதுவும் ஆலோசனை தெரிவிக்கவில்லை. எப்போது வேண்டுமானலும்தேர்தலை வைத்துக் கொள்ளலாம் என்று அவர்கள் கூறினர்.

1 நாள் தேர்தலானாலும், 2 நாள் தேர்தலானாலும் அவர்களுக்கு ஆட்சேபனையில்லைஎன்று அவர்கள் தெரிவித்தனர்.

வருகிற தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டையும், இயந்திர வாக்குப்பதிவும்கட்டாயமாக்கப்படுகிறது.

காலையில் என்னைச் சந்தித்த பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல் குறித்து பலயோசனைகைளத் தெரிவித்தனர். வாக்காளர் அட்டை விநியோகத்தில் முறைகேடுகள்நடக்கலாம் என்றும் அவர்கள் சந்தேகம் தெரிவித்தனர்.

யாராவது, ஒன்றுக்கும் மேற்பட்ட அடையாள அட்டை வைத்திருந்தால் அவர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்காளர் அடையாள அட்டையால் பலவிதமானநண்மைகள் உண்டு என்றார் அவர்.

தமிழக சட்டசபையின் ஆயுள்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் 22ம் தேதியுடன்முடிகிறது. அதற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சிப் பிரதிநிதிகள் தவிர, மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கிமற்றும் பிற அதிகாரிகளுடனும் கில் ஆலோசனை நடத்தினார்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+