உயிர் தப்பியது கோடியக்கரை திமிங்கலம்
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டனம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை அருகே கடலில் சிக்கித் தவித்த திமிங்கலம்பாக் ஜலசந்தியில் விடப்பட்டது.
கோடியக்கரை அருகே 3 மாதங்களாக திமிங்கிலம் ஒன்று கடலோர புதை குழியில்சிக்கி உயிருக்கு போராடி வந்தது. இந்த திமிங்கிலத்தை கடலில் விடும் முயற்சிகள்பலனளிக்காமல் இருந்து வந்தன.
இந்த நிலையில் திமிங்கிலத்தை கடலில் விட கடற்படை உதவி கோரப்பட்டது.மீனவர்கள் உதவியுடன் திமிங்கிலத்தின் உடலில் கயிறுகள் கட்டப்பட்டு கடற்படைகப்பல் மூலம் கடலில் விடப்பட்டது.
ஆனால் திமிங்கிலம் மீண்டும் கரையில் ஒதுங்க முயன்றது. திமிங்கித்தை ஆழ்கடலில் 2கிலோமீட்டர் தூரத்தில் விட்டும் அது மீண்டும் கரை ஒதுங்க முயன்றதால் அந்ததிமிங்கிலத்தை பாக். ஜலசந்தியில் கொண்டு விடுவதற்கான முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications