ஸ்ரீநகரில் ராணுவ அதிகாரி உள்பட 4 ராணுவத்தினர் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே பட்டான் நகரில் ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவஅதிகாரி மற்றும் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் மேலும் 6 பேர் காயமடைந்தனர்.
பட்டான் நகர் அருகே ஆராம் மொஹல்லா பகுதியில் ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே புதன்கிழமை மாலை துப்பாக்கிச் சண்டைநடந்தது. தீவிரவாதிகள் கைத்துப்பாக்கிகள் மற்றும் கிரானைடு குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினார்கள்.
இச்சம்பவத்தில் எதிர்தாக்குதல் நடத்திய 6 ராணுவ வீரர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை மிகவும்கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதல் சம்பவத்தால் பல வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. தீயணைப்புப் படை வீரர்கள்சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் ஸ்ரீநகர்- யூரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் போக வேண்டியஇடங்களுக்குச் செல்ல முடியாமல் அங்கேயே நின்று கொண்டிருக்கின்றன.
பல்வாமா என்ற பகுதியில் உள்ள மார்க்கெட் ஒன்றில் தீவிரவாதிகள், எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீது நடத்திய தாக்குதலில் 2 எல்லைப்பாதுகாப்புப் படையினர் உள்பட 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஸ்ரீநகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications