வரி கேட்ட ஊழியரை தாக்கிய துணை மேயர்
மதுரை:
மதுரை துணை மேயரிடம் சுங்க வரி கேட்டவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது.இது தொடர்பாக துணைமேயர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மதுரையில் இருக்கும் ரிங் ரோடில் செல்லும் வாகனங்களுக்கு மாநகராட்சி சுங்க வரிவசூல் செய்கிறது. கடந்த 11-ம் தேதி மதுரை துணைமேயர் பாண்டியன் ரிங் ரோடில்காரில் வந்து கொண்டிருந்தார். காரில் வருவது யார் என்று தெரியாமல் கேட்மூடப்பட்டது. காரின் ஓட்டுனர் காரின் ஹாரனை பலமாக அடித்தும் கதவுதிறக்கப்படவில்லை.
சுங்க வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விவேகானந்தன் என்ற ஊழியர் காரில்வந்தவர்களை எங்கே செல்ல வேண்டும் எனக் கேட்டார். இதனால் கோபமடைந்ததுணை மேயர் பாண்டியன் விவேகானந்தனை கன்னத்தில் அறைந்தார்.
துணை மேயரே தாக்குவதைக் கண்டு காரில் அமர்ந்திருந்த அவரது ஆதரவாளர்களும்சுங்கவரி ஊழியரை தாக்கத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து அங்கிருந்த சுங்க வரிஊழியர்களுக்கும் அடி விழுந்தது.
துணை மேயரிடமா சுங்க வரி கேட்கிறீர்கள் என்ற பின்னரே அவர்களுக்கு காரில்இருந்தது துணை மேயர் என்பது தெரிய வந்தது.
தாக்குதல் குறித்து சுங்கவரி ஊழியர்கள் போலீசில் புகார் செய்தனர். பாண்டியன் மீதுபோலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் மனைவி சென்ற காருக்குசுங்கவரி கேட்டதால் கரூரில் பெரும் வன்முறை மூண்டது. அதைத் தொடர்ந்துதற்போது மதுரையில் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications