கோவையில் ஈ-லைப் கண்காட்சி
கோவை:
கோவையில் "ஈ லைப் என்ற தகவல் தொழில்நுட்பக் கண்காட்சி நடக்க உள்ளது. இதில் பொதுமக்களுக்கு இன்டர்நெட் குறித்தவிளக்கங்கள் இடம் பெறுகின்றன.
கோவையில் வரும் நவம்பர் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை ஈ லைப் என்ற கண்காட்சி நடக்கிறது. 3 நாட்கள் நடக்கும் இக்கண்காட்சியில் 80 க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
பீளமேட்டில் உள்ள பத்மாவதி கலாச்சார மையத்தில் இந்த கண்காட்சி நடக்கிறது. இந்தக் கண்காட்சியில் தகவல்தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்கள், வெப் டிசைனிங், இ. காமர்ஸ், இன்டர்நெட் சேவைகள், மல்டி மீடியாபோன்றவை விளக்கப்படும்.
மேலும், ஐ.எஸ்.டி.என். லைன் மூலம் நேரடி செயல் விளக்கமும் இடம் பெறுகிறது. இந்த கண்காட்சியில் கம்ப்யூட்டர்கள்,சாப்ட்வேர் தயாரிப்பில் முன்னியில் விளங்கும் விப்ரோ, எச்.பி., சாம்ட்ரான், கம்பேக் போன்ற நிறுவனங்களும் பங்கேற்கின்றன.
வீட்டு உபயோகம் முதல் அலுவலக உபயோகம் வரையிலும் பல்வேறு தரப்பு மக்களுக்கு கம்ப்யூட்டரின் உபயோகம் குறித்துவிளக்கம் அளிக்கப்படும்.












Click it and Unblock the Notifications