த.மா.கா. பிரமுகரின் பண்ணை வீட்டில் ராஜ்குமார்
ஈரோடு:
ஈரோட்டில் ராஜ்குமார் தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனால் விடுவிக்கப்பட்ட ராஜ்குமார் எங்கே, எப்படி தங்கியுள்ளார் என்பதை போலீசார் மற்றும்பத்திரிக்கையாளர்கள் பல்வேறு யூகங்களின் அடிப்படையில் ஈரோடு மாவட்டம் ழுவதும் அலசி ஆராய்ந்து விட்டனர்.
ராஜ்குமார், ஈரோட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், கோவை அருகே உள்ள ஒருமருத்துவமனையில் தங்கியுள்ளார் என்றும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.
இதனால் பத்திரிக்கையாளர்கள் ஈரோட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் சோதனையிட்டனர்.
மேலும், கோவை வழியாக சிறப்பு விமானம் மூலம் பெங்களூருக்கு அவர் அழைத்துச் செல்லப்படலாம் என்ற சந்தேகமும் நீடித்துவந்தது. இதனால், கோவை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள், டி.வி. நிருபர்கள் தங்கள் கேமிரா சகிதாமாகமுகாமிட்டனர். ஆனால் இரவு 12 மணி வரை நீடித்த இந்த "முகாம் நள்ளிரவில் வெறுத்துப் போய் கலைந்தது.
ராஜ்குமார் எங்கு தங்கியுள்ளார் என்ற விஷயம் பரம ரகசியமாகவே பாதுகாக்கப்பட்டிருந்தது.
பின்னர் புதன்கிழமை நள்ளிரவு இரண்டு மணியளவில் தான் அவர் எங்கு தங்கியிருக்கிறார் என்ற உண்மை தெரியவந்தது.
நடிகர் ராஜ்குமார், ஈரோட்டில் பூதப்பாடி பஞ்சாயத்து தலைவரும் தா.மா.க பிரகருமான ராமராஜன் என்பவரது வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
ராமராஜன் பழ. நெடுமாறனின் நெருங்கிய உறவினராவார். ராமராஜனின் பண்ணை வீடு ஈரோடு அருகே உள்ளஅம்மாபேட்டையில் உள்ளது. விடுதலை செய்யப்பட்டதும் ராஜ்குமார் இங்கு அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டார்.
உடனடியாக டாக்டர்களும் அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட கலெக்டர் கருத்தையா பாண்டியன், எஸ்.பி.,அசோக்குமார் தாஸ் ஆகியோர்ராஜ்குமார் ஈரோட்டிற்குள் வரவே இல்லை எனக் கூறினர்.
மாவட்டத்தை நிர்வாகித்து வரும் கலெக்டர், போலீசுக்குக் கூட நெடுமாறன் அல்வா கொடுத்துவிட்டார் நெடுமாறன்.
ராஜ்குமார் இன்று கோவைக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பெங்களூர் செல்வார் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications