செளத்ரியை மீண்டும் பிரதமர் பதவியில் நியமிக்க பிஜி கோர்ட் உத்தரவு
சுவா:
பிஜியில் ராணுவத் தளபதியால் நியமிக்கப்பட்ட இடைக்கால அரசுசட்டவிரோதமானது, மீண்டும் மகேந்திர சவுத்திரி பிரதமாராக்கப்பட வேண்டும் எனபிஜி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிஜியில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மகேந்திரசவுத்திரி வெற்றி பெற்று பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு ஆண்டு முடிந்தநிலையில், ஜார்ஜ் ஸ்பைட் தலைமையிலான புரட்சிக்காரர்கள் மகேந்திரசவுத்திரியையும், அவரது அமைச்சர்களையும் நாடாளுமன்றத்தில் சிறை வைத்து,ஆட்சியைப் பிடித்தனர்.
58 நாட்களுக்குப் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். பின்னர் ராணுவம்ஆட்சியைக் கைப்பற்றியது. ராணுவத் தளபதி பிராங்க் பைனிமராமா, அதிபர் கமீசேமாராவையும் பதவி நீக்கம் செய்தார். இடைக்கால அரசும் நியமிக்கப்பட்டது.
இந்தியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சம உரிமை வழங்கும் வகையில், 1997-ம்ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டமும் ரத்து செய்யப்பட்டது. தனது நீக்கத்தை எதிர்த்துமகேந்திர சவுத்திரி பிஜி ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி டோனிகேட்ஸ் தனது தீர்ப்பில் கூறியதாவது:
இடைக்கால ஆட்சி சட்ட விரோதமானது. 1997-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டம்செல்லும். மீண்டும் மகேந்திர சவுத்திரி பிரதமராக்கப்பட வேண்டும்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் கமீசே மாரா மீண்டும் பாராளுமன்றத்தைக் கூட்டவேண்டும். அப்போதுதான் மகேந்திர சவுத்திரி மீண்டும் பிரதமராக ஆட்சிப்பொறுப்பேற்க முடியும் எனவும் கூறியுள்ளார்.
இதை எதிர்த்து நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய ராணுவம் திட்டமிட்டு இருப்பதாக பிஜிரேடியோ அறிவித்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications