தர்மபுரியில் குடிசை வீடுகளில் மர்மத் தீ
தர்மபுரி :
தர்மபுரி அருகே மர்மத் தீக்குப் பயந்து மக்கள் வீட்டிற்கு வெளியில் படுத்துத் தூங்கி வருகின்றனர்.
நள்ளிரவில் திடீரென குடிசையில் பற்றி எரியும் தீயை அவ்வப்போது அணைக்கின்றனர். இது குறித்து போலீசில் புகார் குறித்தும் நடவடிக்கைஎடுக்காததால், அச்சத்தில் மக்கள் வாழ்கின்றனர்.
தர்மபுரி அருகே சின்னத்தோப்பு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஒரு குடிசை வீட்டில் திடீரென தீப் பிடித்தது.பொதுமக்கள் ஒன்று கூடி அணைத்தனர். ஆனால் தொடர்ந்து இதே நிலை கடந்த 4 நாட்களாக நீடித்து வருகிறது.
ஒவ்வொருவரது வீடாக தினமும் தீப்பிடித்து வருவதால் எந்த வீட்டில் இரவு தீப்பிடிக்குமோ என அஞ்சி அப்பாவி மக்கள், கலக்கமடைந்தனர். இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் அலட்சியமாக வந்து பார்க்கிறோம் எனக் கூறி அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டனர்.
இதனால் இரவு நேரங்களில் வீட்டிற்குள் படுத்து தூங்க முடியாமல், வீட்டிற்கு காவலாகவும், பாதுகாப்பிற்காகவும் வீட்டிற்கு வெளியில் திண்ணையில்படுத்து தூங்கி வருகின்றனர்.
இந்த மர்மத் தீ தர்மபுரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகவலை அறிந்த தாசில்தார் அன்பரசு சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். உரியநடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications