விசாரணைக் குழு முன் ஆஜரானார் அசாருதீன்
ஹைதராபாத்:
முன்ளாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் முகமது அசாருதின், கிரிக்கெட் ஊழல் புகார்குறித்த சி.பி.ஐ. அறிக்கை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட அதிகாரி முன்பு வியாழக்கிழமை ஆஜரானார்.
கிரிக்கெட் மேட்ச் பிக்சிங் குறித்து சி.பி.ஐ.யால் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரிக்கஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முன்னாள் சி.பி.ஐ. கூடுதல் இயக்குனர்மாதவனை நியமித்திருக்கிறது.
குற்றம் சாட்டப்பட்ட வீரர்களிடம் அவர் விசாரணை நடத்தி வருகிறார். அசாருதீனுக்குபலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் வரவில்லை. இந்த நிலையில் ஹைதராபாத்தில்விசாரணை நடந்தால் வருவதாக அசாருதீன் கூறியிருந்தார். இதையடுத்து அசாருதீனைவிசாரிக்க மாதவன் ஹைதராபாத் வந்தார்.
ஹோட்டலில் குவிந்திருந்த 100-க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள்,புகைப்படக்காரர்களை தவிர்த்து விட்டு ஹோட்டல் ரமதாவிலுள்ள நான்காவதுமாடிக்குச் சென்று விட்டார். பின்னர் அங்கிருந்து அவர் 2-வது மாடிக்கு அழைத்துவரப்பட்டார். அங்கு ஒரு அறையில் காத்திருந்த மாதவனைச் சந்தித்தார். இந்தவிசாரணையின்போது, இவர்கள் இருவர் தவிர அசாருதீன் தவிர அவரது வழக்கறிஞர்பி.கே.சர்மாவும் உடன் இருந்தார்.
பிற்பகல் 12.45 மணிக்கு மேல், தேவைப்பட்டால் மாதவன் செய்தியாளர்களைச்சந்திப்பார் என்ற செய்தி நிருபர்களுக்கு வழங்கப்பட்டது.
அசாருதினை சந்திக்கும் முன் மாதவன் செய்தியாளர்களிடம் கூறுகையில் விசாரணைநான்கு மணி நேரமோ அல்லது ஆறு மணி நேரமோ நடைபெறும்.
அசார் நாட்டிற்காக எத்தனையோ செய்திருக்கிறார். அதை கருத்தில் கொண்டு அவரைவிசாரிக்க அவர் விருப்பப்படி ஹைதராபாத் வந்துள்ளேன்.
அசாரிடம் நடத்தப்படுவது விசாரணை மட்டுமே . சிபி.ஐ. யின் பணி முடிந்து விட்டது.மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுமானால், அதை காவல் துறைமேற்கொள்ளும் என்றார்.
சி.பி.ஐ. அறிக்கையில் அசாருக்கு, மும்பை தாதாக்களுடனும் தொடர்பு உள்ளதாககூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications