கடவுளுக்கு நன்றி சொல்வோம்..ஜெ.
சென்னை:
சந்தனக் கடத்தல்காரன் வீரப்பனால் கடத்தப்பட்ட, நடிகர் ராஜ்குமார் 108 நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டதற்காக கடவுளுக்கு நன்றிசொல்வோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஒரு கொடுங் குற்றவாளியிடமிருந்து, மதிப்பு மிக்க மனித உயிரைக் காப்பாற்றுவதற்காக இரண்டு மாநில அரசுகளும் மண்யிட்டுக் கிடந்தது, இதுவேஇந்தியாவில் கடைசி முறையாக இருக்க வேண்டும்.
கொடியவனின் நிழலில் பிரிவினைவாதிகளும், தீவிரவாதிகளும் கைகோர்ப்பதும் இத்தோடு முடிவு பெற வேண்டும். ஒரு சந்தன மரத் திருடனால் இந்தியஇறையாண்மைக்கு கேடு இழைக்க முடியும் என்ற கொடிய வரலாற்றை மேலும் தொடர அனுமதிக்கக் கூடாது.
எனவே, நடிகர் ராஜ்குமார் மீட்கப்பட்ட பிறகு சிறிதும் தாமதப்படுத்தாமல் கொடியவன் வீரப்பனையும், அவனோடு தொடர்புடையவர்களையும்உடனடியாகக் கண்டுபிடிகக் வேண்டும்.
மாநில அரசு இதைச் செய்ய வில்லை என்றால் மத்திய அரசு தலையிட்டு நாட்டின் நன்மைக்காக வீரப்பன் கொட்டத்திற்கு முடிவு கட்ட வேண்டும்.வீரப்பனைப் பிடிப்பதற்கு மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
வீரப்பனை உயிருடன் பிடிக்க வேண்டும் அல்லது சுட்டுக் கொல்ல வேண்டும். எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் ஐஜி விஜயகுமார் தலைமையில்கூட்டு அதிரடிப் படையினர் மூலம் வீரப்பனைப் பிடிப்பதற்கு அரசு முயற்சி எடுக்க வேண்டும்.
நடிகர் ராஜ்குமார் விடுதலையான நிலையில் தீவிரவாதத்தை முற்றிலும் முடிவுக்குக் கொண்டு வரும் வகையிலும், வீரப்பன் அட்டகாசத்தை முடிவுக்குக்கொண்டு வரும் வகையிலும், கருணாநிதியால் வீரப்பனுக்குத் தாரை வார்க்கப்பட்ட காட்டுப் பகுதியை மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டு வர மத்தியஅரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications