டீ எஸ்டேட்டில் விழுந்த "மிக் விமானம்
Subscribe to Oneindia Tamil
ஜல்பைகுரி (மேற்கு வங்கம்):
மேற்கு வங்க மாநிலம் மாதரிஹாட் அருகே உள்ள ஜல்பைகுரி நகரிலுள்ள டீ எஸ்டேட்டில், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக் 21 ரக போர்விமானம் விழுந்து நொறுங்கியது.
புதன்கிழமை இந்த விபத்து நடந்தது. விபத்து குறித்து ஜல்பைகுரி மாஜிஸ்திரேட் சப்ரதா குப்தா கூறுகையில், இவ்விபத்தில் விமானி காயமடைந்தார். அவர்ஹசிமாரா நகரிலுள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விமானம் விழுந்ததில், உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications