சிதம்பரம் கோஷ்டி மோதலில் ஒருவர் கொலை
சிதம்பரம்:
பழிக்குப்பழி வாங்கும் விதத்தில் சிதம்பரம் அருகே ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுக்கை கிராமத்தில் வசித்து வருபவர் புலவர் ஆறுமுகம்.இவர் செவ்வாய் கிழமையன்று இரவு குடும்பத்தாருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது 10 பேர் கொண்டகும்பல் அவரை, அவரது குடும்பத்தார் கண் முன்னே வெட்டிக் கொன்றது.
போலீஸ் விசாரணையில் தமிழ்வாணன் மற்றும் குமார் என்பவர்கள் தலைமையில்தான் இந்தக் கொலைநடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
தற்போது கொலை செய்யபப்பட்டுள்ள ஆறுமுகம் இரு ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்ட ராமச்சந்திரன்கோஷ்டியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கொலைக்கு பழி வாங்கும் விதமாக திருவள்ளுவன் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு கடலூரிலுள்ள புதுச்சத்திரம் அருகே பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது கொல்லப்பட்டார்.
இதற்கு பழி வாங்கும் விதமாக ஆறுமுகம் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இப்பகுதியில் பலத்த போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.
இந்த கோஷ்டி தகராறு காரணமாக கடந்த 3 ஆண்டுகளில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications