வீரப்பனை சட்டத்தின் முன் நிறுத்துங்கள் .. வாழப்பாடி
சென்னை:
வீரப்பனை உயிருடன் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் அல்லது சுட்டுக் கொல்ல வேண்டும் என்று தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடிராமமூர்த்தி புதன்கிழமை தெரிவித்தார்.
சென்னையில், வாழப்பாடி ராமமூர்த்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கன்னட நடிகர் ராஜ்குமார் விடுதலை தமிழக முதல்வர் கருணாநிதியின் சாதுர்யத்துக்கும், சாணக்கியத்துக்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றி ஆகும்.
நடிகர் ராஜ்குமார் 108 நாட்களுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார் என்ற செய்தி மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. சற்றும் எதிர்பாராத இந்த திடீர் திருப்பத்தைமகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
அதே நேரம் வீரப்பனை உயிருடனோ அல்லது சுட்டுக் கொன்றோ பிடிக்க வேண்டும் என்று தமிழக-கர்நாடக அரசுகளைக் கேட்டுக் கொள்கிறேன்.
வீரப்பன் இப்போது விடுதலைப்புலிகளின் பிடியில் சிக்கி உள்ளார். விடுதலைப் புலிகளின் ஏஜன்டுகளாக செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்பான தமிழ் தேசியவிடுதலைப்படை போன்ற தீவிரவாத அமைப்புக்களால் அவர் மாவீரனாக சித்தரிக்கப்படுகிற கேவலமான நிலைமையும் ஏற்படலாம்.
வீரப்பனால் ராஜ்குமார் விடுவிக்கப்பட்டு விட்டதால் இரண்டு அரசுகளும், இத்துடன் பிரச்சனை முடிந்து விட்டது என்ற அலட்சியமாக இருக்காமல்விரைந்து செயல்பட்டு வீரப்பன் உயிருடன் பிடித்து சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தின் முன் அவர் நிறுத்தப்பட வேண்டும்.
இப்போது, வீரப்பன் தனி ஆள் இல்லை. அவரை வழி நடத்திச் செல்லும் தீவிரவாத அமைப்புக்கள் அவருக்குப் பின்னால் இருக்கின்றன என்பதை தமிழகமற்றும் கர்நாடக அரசுகள் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
இதனை இரு அரசுகளும் சவாலாக ஏற்றுக் கொண்டு, வீரப்பன் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இரு அரசுகளும் எடுக்கும்நடவடிக்கைகளுக்கு தமிழக ராஜீவ் காங்கிரஸ் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்வாழப்பாடி ராமமூர்த்தி.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications