"சிறு வயது திருமணமே மக்கள்தொகை அதிகரிப்புக்குக் காரணம்
டெல்லி:
இளம் வயதில் திருமணம் செய்வது, ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மற்றும் படிப்பறிவின்மைஆகியவைதான் மக்கள் தொகை பெருகுவதற்குக் காரணம் என்று தேசிய குடும்ப நல ஆய்வு தெரிவிக்கிறது.
தேசிய குடும்ப நல ஆய்வு முடிவுகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் சி.பி.தாகூர் வெளியிட்டார். ஆய்வில்கூறப்பட்டிருப்பதாவது:
இந்தியாவின் மொத்த குழந்தைப் பிறப்பு விகிதம் கடந்த ஆண்டுகளில் குறைந்துள்ளது. எனினும் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பிகார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இன்னமும் ஒரு பெண்ணுக்கு 3 அல்லது 4குழந்தைகள் இருக்கிறார்கள்.
2010 முதல் 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஒரு பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் என்ற நிலை ஏற்பட்டால்2050 க்குள் மக்கள்தொகை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
இந்தியா முழுவதிலுமிருந்து 90, 000 பெண்களிடம் மக்கள்தொகை குறித்துக் கருத்துக் கேட்கப்பட்டது. அவர்கள்அனைவருமே சிறுவயதில் திருமணம் செய்து வைப்பதால் மக்கள்தொகை அதிகரிக்கிறது என்றனர்.
இந்திய சட்டப்படி பெண்ணின் திருமண வயது 18. ஆனால் இந்தியப் பெண்களில் பாதிப்பேர் 18 வயதுக்குமுன்னரே திருமணம் செய்து கொள்கின்றனர்.
இந்தியாவில் 24 சதவீதம் பெண்கள் 24 வயதில் திருமணம் செய்து கொள்கிறார்கள். 9 சதவீதம் பேர் 13வயதிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள். இது இன்னும் நடைமுறையில் இருக்கிறது.
புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போடுகின்றனர். இந்தியா முழுவதிலும்48 சதவீதம் பேர் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போடுகின்றனர் என்று தெரிய வந்துள்ளது.
மேகாலயாவில் 16 சதவீதம் பேரும், ஹிமாச்சல பிரதேசத்தில் 61 சதவீதம் பேரும் புதிதாகத் திருமணம் செய்துகொண்ட பெண்களில் உடனடியாகக் குழந்தை பெற்றுக் கொள்வதைத் தவிர்க்கின்றனர்.
இதேபோல, உத்தரப்பிரதேசம், பிகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போடுவதில் புதுத் தம்பதிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் திருமணம் செய்து கொண்ட பெண்களில் 70 சதவீதம் பேருக்கு இரண்டு குழந்தைகளேஉள்ளன. அவர்கள் இதற்கு மேல் குழந்தைகளே வேண்டாம் என்று கூறுகிறார்கள்.
பிகார், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலாயா, மிசோரம் மாநிலங்களில் வாழும் பெண்களுக்கு 3அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த சில ஆண்டுகளில் திருமணம்செய்து கொண்ட இளம் பெண்கள்.
உத்தரப் பிரதேசத்தில் 53 சதவீதம் பேர், பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளைப் பெறுவதையேவிரும்புகின்றனர். அதே போல் பிகார் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலில் 43 சதவீதம் பேர் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளைப் பெறுவதையே விரும்புகின்றனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications