அதிமுகவுடன் கூட்டணியா? மறுக்கிறது பாமக
திருச்சி:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் புதன்கிழமை தெரிவித்தார்.
திருச்சியில் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ் கூறியதாவது:
தமிழகத்தில் 3 வது அணி அமையும் என்று பரவலாக எல்லோரும் பேசி வருகிறார்கள். ஆனால் அது அமையுமா? அமையாதா? என்பது ஜனவரிமாதம் தெரிந்து விடும்.
எந்த அணி அமைந்தாலும் எங்கள் நிலையில் மாற்றம் இல்லை. இனி எப்போதும் அதிமுக வுடன் உறவு இல்லை. புதிய நீதிக் கட்சியின் வரவால் எங்கள்கட்சியின் ஓட்டுக்கள் குறையாது. தேர்தலுக்குப் பின்னர் சாதிக் கட்சியின் நிலை என்னவென்று தெரியும்.
அரசு அளிக்கும் நலத்திட்டங்களை ஐஏஎஸ் அதிகாரிகள் வீணடிக்கிறார்கள். சுதந்திரம் அடைந்து 53 ஆண்டுகள் ஆகின்றன. இன்றும் விவசாயிகள்வறுமையில் வாழ்கிறார்கள். விவசாயிகள் குடிசையில் வாழ்கிறார்கள். ஒவ்வொரு அரசு அதிகாரிகளும் அரசு குடியிருப்புக்களில் சுகமாகவாழ்கிறார்கள்.
நோயால் இறந்தவர்களை விட நம் நாட்டில் விபத்தில் இறந்தவர்கள் அதிகம். வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. இந்த விபத்துக்கள் குரித்துபோக்குவரத்து துறை அக்கறை காட்டுவதில்லை.
அதி நவீன முறையில் கண்காணிப்பு கருவிகள் வைத்து விபத்து தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் தொகுதி வாரியாகமாநாடுகள் நடத்தி வருகிறது. 234 வது தொகுதி மாநாட்டை திருச்சியில் நடத்தவிருக்கிறோம் என்றார் டாக்டர் ராமதாஸ்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications