பெங்களூர் தமிழ்ச் சங்கம் மகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

வீரப்பன் பிடியிலிருந்து, கன்னட நடிகர் ராஜ்குமார் விடுவிக்கப்பட்டதற்கு பெங்களூர் தமிழ்ச் சங்கம் நன்றியும், வரவேற்பும் தெரிவித்து இருக்கிறது.

கன்னட நடிகர் ராஜ்குமார், வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்டு 108 நாட்களுக்குப் பிறகு விடு விக்கப்பட்டார். அவரை விடுவித்து வந்தபழ.நெடுமாறனுக்கும், தமிழக-கர்நாடக அரசுகளுக்கும் பல்வேறு தமிழ் கன்னட அமைப்புக்கள் நன்றியும், வரவேற்பும் தெரிவித்துள்ளன.

பெங்களூர் தமிழ்ச் சங்கத் தலைவர் க.சுப்ரமணியன், செயலாளர் இராசு.மாறன் ஆகியோர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், கன்னட நடிகர் ராஜ்குமார் சந்தனவீரப்பனால் கடத்தப்பட்டு 108 நாட்களுக்குப் பின் விடு விக்கப்பட்டிருக்கிறார். இந்தச் செய்தி மகிழ்ச்சி அளிக்கின்றது.

கர்நாடகத்தில் உள்ள 45 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள், கன்னட மக்களின் மகிழ்ச்சியில் பங்கு கொள்கிறார்கள் என்பதை பெங்களூர் தமிழ்ச் சங்கம்மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.

நடிகர் ராஜ்குமார் விடுதலைக்குக் காரணமாக இருந்த பழ.நெடுமாறன் உள்ளிட்ட தூதுக் குழுவினரையும், கர்நாடக-தமிழக அரசுகளையும் பெங்களூர்தமிழ்ச் சங்கம் பாராட்டி நன்றி தெரிவிக்கிறது.

நடிகர் ராஜ்குமார் விடுவிக்கப்பட்ட பிறகு தற்போதுள்ள சூழ்நிலையில், மாற்றமோ, பதட்டமோ உருவாகும் என்று அச்சம் கொள்ள வேண்டிய அவசியம்இல்லை. கர்நாடக அரசும், காவல்துறையும் தகுந்த பாதுகாப்பு வழங்க பெங்களூர் தமிழ்ச் சங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது எனஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+