60 லட்சம் வாக்குகளையும் கையால் எண்ண சொல்கிறார் கோர்
புளோரிடா:
புளோரிடாவில் பதிவான 60லட்சம் வாக்குகளையும் கைகளால் எண்ண வேணடும் என இப்போது அல்கோர்கோரிக்கை விடுத்துள்ளர்.
அல்கோரும், ஜார்ஜ் புஷ்சும் சமநிலையில் உள்ள சூழ்நிலையில், புளோரிடாவின் வாக்குகள் தான் வெற்றிதோல்வியை நிர்ணயிக்க உள்ளன.
புளோரிடாவில் 3 கவுண்டிகளில் நடந்து முடிந்த இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் (கைகளால்நடத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை) புஷ் 300 வாக்குகள் எண்ணிக்கையில் முன்னணியில் உள்ளார்.
தபால் வாக்குகள்:
வெளிநாடுகளில் வசிக்கும் புளோரிடாவாசிகள் அளித்த தபால் வாக்குகள் அனைத்தும் சனிக்கிழமைக்குள் வந்துசேர்ந்துவிடும். இவை எண்ணப்பட்ட பின்னர் தான் யாருக்கு வெற்றி என்பது தெரியவரும்.
அதே நேரத்தில் மொத்தம் 60 லட்சம் பேர் வாக்களித்ததில் வெறும் 300 வாக்குகள் மட்டுமே புஷ் அதிகம் பெற்றுமுன்னணியில் இருப்பதால் இந்த 60 லட்சம் வாக்குகளையும் கைகளால் எண்ண வேண்டும் என கோர்கோரியுள்ளார்.
தேர்தலில் நடந்த முறைகேடுகள், காணாமல் போன வாக்குச் சீட்டுகள், தவறான வாக்குச் சீட்டால் வந்த பிரச்சனைஎன ஏகப்பட்ட புகார்களை கோர் அள்ளி வீசி வருகிறார். இதையெல்லாம் எதிர்த்து நீதிமன்றத்தில் பலவழக்குகளையும் அவரது கட்சி தாக்கல் செய்துள்ளது.
இந் நிலையில் கைகளால் எண்ணப்படும் வாக்கு எண்ணிக்கையை ஏற்றுக் கொள்ள குடியரசுக் கட்சியின்வேட்பாளர் ஜார்ஜ் புஷ் ஒப்புக் கொண்டால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்குகளை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அல்கோர் கூறினார்.
இதற்காக புஷ்சை சந்தித்துப் பேசவும் தயாராக இருப்பதாகவும் அறிவித்தார்.
ஆனால், இதை புஷ் ஏற்க மறுத்துவிட்டார். தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டவுடன் கிடைக்கும் முடிவு தான்இறுதியானது என்றார்.
புளோரிடா முழுவதும் கைகளால் எண்ண கோரிக்கை:
அமெரிக்காவில் தேர்தல் நடந்து முடிந்த 8 நாட்கள் ஆன நிலையிலும் யார் வெற்றி பெற்றது என்பதில் குழப்பம்நீடிக்கிறது. புளோரிடாவில் முதலில் ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தார் புஷ்.ஆனால், அங்கு 3 கவுண்டிகளில் வாக்குகளை கைகளால் எண்ணியபோது கோர் அதிக வாக்குகள் பெற்றார். புஷ்இப்போது வெறும் 300 வாக்குகள் தான் அதிகம் பெற்று முன்னணியில் உள்ளார்.
இதனால் தான் புளோரிடா முழுவதும் கைகளால் வாக்குகளை எண்ணக் கோருகிறார் அல்கோர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
கை எண்ணிக்கையை ஏற்க அதிகாரி மறுப்பு:
இந் நிலையில் 3 கவுண்டிகளில் நடத்தப்பட்ட கைகளால் எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கை முடிவை ஏற்கபுளோரிடா மாகாண உள்துறைதச் செயலாளர் மறுத்துவிட்டார்.
ஏதற்காக இங்கு மறுபடியும் வாக்குகள் எண்ணப்பட்டன என்று இந்த கவுண்டிகளின் தேர்தல் அதிகாரிகள் கொடுத்தவிளக்கம் ஏற்கத்தக்க வகையில் இல்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications