தனி ஈழமே சிறந்த தீர்வு .. வைகோ
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் பாலசிங்கத்தைச் சந்தித்தது குறித்துக் கேள்விஎழுப்பினால் அதற்கு பதிலளிக்கவும், இவ்விஷயத்தில் மதிமுக வின் நிலை குறித்தும் தெளிவாகத் தெரிவிக்கப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர்வைகோ வியாழக்கிழமை நிருபர்களிடம் தெரிவித்தார்.
கடந்த வாரம் மதிமுக வின் பொதுச் செயலாளராக வைகோ ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து கட்சியின் பொதுக் குழுக் கூட்டம்வியாழக்கிழமை நடந்தது. கூட்டம் முடிந்த பின் நிருபர்களிடம் பேசுகையில், லண்டனில் விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் பாலசிங்கத்தைச் சந்தித்துப்பேசினேன். இது மனிதாபிமான அடிப்படையிலான சந்திப்பு. இதில் அரசியல் முக்கியத்துவம் எதுவும் இல்லை.
நமது நாட்டில்தான் விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளரை சந்திப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரிட்டனில் அதுபோன்ற தடையில்லை.
அகில இந்திய பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் பங்காரு லட்சுமணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசிய ஜனநாயகக் கட்சியில் உள்ள கூட்டணித்தலைவர்கள் அனைவரும் கட்சியின் கொள்கைகளுக்குப் பங்கம் வராதவாறு, கட்சியுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
புலிகளின் செய்தித் தொடர்பாளர் பாலசிங்கத்தைச் சந்தித்தது குறித்து நான் ஏற்கனவே பாரதிய ஜனதாக் கட்சிப் பிரமுகர்கள் பலரிடம் விரிவாகக் கூறியுள்ளேன்.நடக்கவிருக்கும் தேசிய ஜனநாயகக் கட்சியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டால் நான் பதிலளிக்கத் தயாராகஇருக்கிறேன்.
இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டுமானால், தனி ஈழம் கேட்டுப் போராடி வரும் தமிழர்களுக்கு தனி ஈழம் கொடுப்பதே சிறந்தது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை, அவர், இலங்கை அதிபர் சந்திரிகாவுடன் பேச்சுவார்த்தைநடத்தும் போது கைது செய்ய வேண்டும் என்று பல அரசியல் கட்சித் தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். யார் வேண்டுமானாலும் என்னவேண்டுமானாலும் சொல்லட்டும். அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டியதில்லை.
டான்சி ஊழல் தீர்ப்பு:
சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு டான்சி நிலப் பேர ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.
இந்நிலையில் அதிமுக வினர் செயற்குழுக் கூட்டம் நடத்தினர். செயற்குழுக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் முதல்வேலையாக கருணாநிதியை ஜெயலில் அடைப்போம் என்று பேசியுள்ளார்.
டான்சி நிலப் பேர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் முன்னுக்குப் பின் முரணாக மனநிலைபாதிக்கப்பட்டவர் போல் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார் அவர். ஊழல் வழக்கில் தண்டனை கிடைத்துள்ளதால், அவரது மனநிலை சமச்சீர்இல்லாமல் பேசுகிறார் என்பதையே இது காட்டுகிறது என்றார்.
யாருடன் கூட்டணி?:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில், மதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே தொடர்ந்து இருக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை.
வீரப்பன் பிடியிலிருந்து, கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்கப்பட்டு விட்ட செய்தி மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக முதல்வர் கருணாநிதி இந்த விவகாரத்தைமிகவும் சாமர்த்தியமாகக் கையாண்டுள்ளார். அடுத்த மாதம் முதல் மதிமுக தேர்தல் நிதி வசூல் செய்யத் தொடங்கும் என்றார் வைகோ.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications