ஜாதிக் கலவரம்.. கொடியங்குளத்திற்கு கூடுதல் நிதி
சென்னை:
கலவரத்தால் பாதிக்கப்பட்ட கொடியங்குளம் கிராமத்தை சேர்ந்த 145 பேருக்குகூடுதலாக ரூ 11.45 இழப்பீடு தொகை வழங்க முதல்வர் கருணாநிதிஉத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
1995- ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வட்டம், கொடியங்குளம்கிராமத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து ஒட்டபபிடாரம் வட்டத்தில் இருகிராமங்களும், திருவைகுண்டம் வட்டத்தில் 4 கிராமங்களும் பாதிப்புக்குள்ளாயின.
பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கான துணை ஆட்சியர்தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டு. சேத மதிப்பு அறியப்பட்டு அக்குழுவின்பரிந்துரையின் அடிப்படையில் நிவாரணத்தொகை வழங்கப்பட்டது.
இது தவிர இச்சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்காக முந்தைய அரசால்கோமதிநாயகம் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு. அக் கமிஷனின்பரிந்துரையின் அடிப்படையிலும் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
இவ்வாறு இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு இதுவரை ஏறத்தாழ 37 லட்ச ரூபாய்க்குமேல் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
கொடியங் குளத்தைச் சேர்ந்த ஆதி திராவிட மக்கள் கோமதி நாயகம் விசாரணைக்கமிஷன் முன்பு ஆஜராகவில்லை. அதனால் விசாரணைக் கமிஷன் அவர்களைவிசாரித்து அவர்களுக்கு நிவாரண நிதி வழங்கிட பரிந்துரை செய்ய இயலவில்லை.
தற்பொழுது கொடியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட 145 ஆதிதிராவிடமக்களின் வாழக்கை நிலையை அனுசரித்து அவர்களுக்கும் கூடுதல் இழப்பீடுவழங்கிட வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.
அவர்களது கோரிக்கைகளை பரிசீலித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர்அவர்களுக்கு கூடுதலாக 11 லட்சத்து 45,000 ரூபாய் இழப்பீடுத் தொகையாகவழங்கிட அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவரின் பரிந்துரையை ஏற்று கூடுதல் இழப்பீடுத்தொகையாக 11.45 ஆயிரம் ரூபாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிட முதல்வர்கருணாநிதி ஆணையிட்டுள்ளார் என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications