அமைச்சர் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை
சென்னை:
காதித்துறையில் ஊழல் செய்த வழக்கில் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உள்பட 3 பேர் மீதான விசாரணைக்கு நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
காதித்துறையின் கீழ் இயங்கும் பட்டு விற்பனை மையத்தில் சரக்குகள் பரிமாற்றம் செய்வதில் போலி பில் தயாரித்தது. ரூ 2 கோடியே 56 லட்சம் வரைமோசடி செய்ததாக அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், காதித்துறையின் முன்னாள் தலைமை அதிகாரி அஜய் பட்டாச்சார்யா, கண்காணிப்பாளர் சீனிவாசன்ஆகியோரிடம் விசாரணை நடத்தக் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பிலிப் தாமஸ் வழக்குதொடர்ந்தார்.
நீதிபதி அசோக் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்ததது. அமைச்சர் மற்றும் குற்றம் சுமத்தப்பட்ட அதிகாரிகள் மீது விசாரணை செய்யுமாறுசி.பி.சி.ஐ.டி.போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இது போல் உள்ள புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஒரு வழக்கு தொடர்பாக இரு மனுக்கள் மீது விசாரணை நடத்தஅவசியமில்லை என்று போலீசாரால் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
இதனால் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து அறிக்கைதாக்கல் செய்யும் வரை இந்த தடை அமலில் இருக்கும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
