மாடிஸ் விலையைக் குறைக்கிறது தேவூ
கேள்வி - பதில்
கே: கிரிக்கெட் ஊழல், நாட்டுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்கிறாரே கருணாநிதி?
ப: பின் என்னவாம் ? நாட்டுக்கு த் துரோகம்தான். கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் என்ன, மக்களிடம் ஓட்டு பெற்றா ஊழல்புரிகிறார்கள்?மக்களின் அங்கீகாரம் இல்லாத ஊழல் -துரோகம்தானே!
கே: ஜோதிபாசுவின் ஓய்வு குறித்து ...?
ப: இருப்பத்து மூன்று ஆண்டுகள் தொடர்ந்து ஒரு மாநிலத்தின் முதல்வராக ஒருவரே இருப்பது என்பது சாதாரணமான விஷயமல்ல.
பெரும் அரசியல் திறனைக் காட்டுகிற விஷயம் அது. அவருடைய நிர்வாகத்தில் பெரிய நில உடமைகள் தகர்க்கப்பட்டு, நிலமற்ற பலருக்கு நிலங்கள்வழங்கப்பட்டதால் - மார்க்சிஸ்ட் கட்சிக்கு பெரும் அரசியல் லாபம் கிட்டியது என்றாலும்- ஏழை விவசாயிகளுக்கு இது பெரிதும் நன்மை புரிந்தது.
ஆனால் இது தவிர குறிப்பிடும்படியான சாதனை எதுவும் அவருடைய நிர்வாகத்தில் நிகழ்ந்ததாகக் கூற முடியவில்லை. அவருடைய மகனைப் பற்றிஅவ்வப்போது சில புகார்கள் எழுந்தாலும், பெரிதாக ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாமலே அவர் பதவியில் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், மேற்கு வங்கம் பல துறைகளில் - குறிப்பாக கல்வித்துறை, தொழில் துறை - ஆகியவற்றில் பின் தங்கியதற்கு அவருடைய நிர்வாகமேபொறுப்பேற்க வேண்டும்.
கே: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போலீசுக்கு சங்கம் வைக்க அனுமதி வழங்குவோம் என்று பா.ம.க. தலைவர் டாகடர் ராமதாஸ்கூறியிருக்கிறாரே?
ப: இதில் என்ன வியப்பு? இவர்கள் நாட்டிற்கு நல்லது செய்வார்கள் என்று யாராவது எதிர் பார்க்கிறோமா?
கே: மூன்றாவது அணி என்றால் என்ன?
ப: இரண்டும் கெட்டான் என்று சொல்வதில்லையா? அதையே கொஞ்சம் நாசூக்காகச் சொன்னால் - மூன்றாவது அணி.
கே: இன் று, நாத்திகம் எப்படி இருக்கிறது.?ஆத்திகம் எப்படி இருக்கிறது?
ப: இரண்டுமே பணம் பண்ணுவதற்கான பாதைகள் ஆகி வருகின்றன.
கே:மறைந்த சி.சுப்ரமண்யம் அவர்களைப் பற்றி, தாங்கள் கூற விரும்புவது?
ப: தேசியவாதி, சுதந்திரப் போராட்டத்தில் பங்கு வகித்தவர், மிகவும் திறமை வாய்ந்த நிர்வாகி. தெளிவான சிந்சதனை படைத்தவர். கடினமானவிஷயங்களைக் கூட எளிதாகப் புரிந்து கொள்ளும் நுண்ணறிவு படைத்தவர்.
நாட்டின் எதிர்காலம் பற்றி இறுதி மூச்சுவரை சிந்தித்தவர். பசுமைப் புரட்சி என்கிற விவசாயத்துறை சாதனைக்கு வித்திட்டவர். பண்பாளர், ஓர்அரசியல்வாதிக்குரிய சில குறைகள் இருந்தாலும் - அவரைப் போன்ற அரசியல்வாதிகள் இன்று இல்லை என்று கூறக்கூடிய வகையில் தனது அரசியலைநடத்தியவர்.
கே: காங்கிரசும், பா.ஜ.க.வும் ஒன்று தான் என்று கூறுகிற நிலைக்கு தள்ளப்பட்ட நீங்கள், தவறுகளை கண்டிக்கும் போது பா.ஜ.க.வை விடகாங்கிரசையே அதிகம் குட்டுகிறீர்களே. இது சரியா?
ப: பா.ஜ.க.ஒரு வேளை உருப்பட்டாலும் உருப்படலாம் என்ற நப்பாசை இருக்கிறது ; காங்கிரஸ் உருப்படுவதற்கு ஒரு வாய்ப்பும் இருப்பதாகத் தெரியவில்லை.இந்த இரண்டு கட்சிகளைப் பற்றிய என் அணுகு முறையில் நீங்கள் காண்கிற வித்தியாசத்திற்கு இதுதான் காரணம்.
கே: மத்தியில் அமைச்சரவை விரிவாக்கம் அடிக்கடி நடப்பது ஏன்?
ப: பா.ஜ.க.வில் அடிக்கடி சிலரை திருப்திப்படுத்த வேண்டியிருப்பதுதான் முக்கிய காரணம்.
கே: உத்திரப் பிரதேச்தில் முக்கிய அரசியல் தலைவர்களைத் தீர்த்துக் கட்டிவிட்டு, சென்னை வழியாக தப்பிச் செல்ல விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைஊடுறுவியுள்ளது என்று மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது பற்றி ...?
ப: சென்னை வழியாக தப்பிப்பதா? எதற்கு? சென்னை வந்தாலே - தப்பிப்பதுதானே!
கே: வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்கே நான் முன்னுரிமை தருவேன் என்ற புதிய டி.ஜி.பி. ராஜ கோபாலனின் அறிவிப்பு குறித்து...?
ப: அதற்குப் பிறகு இதுபற்றி அவர் ஒன்றுமே பேசவில்லையே! வீரப்பனைப் பற்றிச் பேச நீ யார்? நீ மனதிற்குள் பெரிய போலீஸ்காரன் என்றநினைப்பா? மூடு வாயை! என்று உத்திரவு பிறப்பிக்கப்பட்டு விட்டதோ என்னவோ!
கே: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு பற்றி தங்கள் கருத்து?
ப: எங்கே முடிந்தது - அமெரிக்க ஜனநாயக வழிமுறைகள், நமது வழிமுறைகளைக் காட்டிலும் ரொம்ப மேலானவை - என்ற எண்ணம்தான்.
கே: திருமண வைபவம் போன்ற சில முக்கிய நிகழ்ச்சிகளில் மூப்பனாரும். கலைஞரும் மிகவும் நெருங்கி உரையாடும் பண்பு பற்றி, தங்கள் அபிப்பிராயம்என்ன?
ப: இந்த மாதிரி சர்வ சாதாரணமான நிகழ்ச்சிகள் கூட, பண்பு என்று வர்ணிக்கப்படுவதுதான் விசித்திரம். இப்படியே போனால், விமானத்தில் இருதலைவர்கள் சந்தித்தபோது, ஒருவரை ஒருவர் விமானத்திலிருந்து தள்ளி விட முயற்சிக்கவில்லையே! இந்த பண்பை பாராட்ட வேண்டாமா? என்று கூடகேட்க வேண்டியதுதான்.












Click it and Unblock the Notifications