மாடிஸ் விலையைக் குறைக்கிறது தேவூ
கேள்வி - பதில்
கே: சிறந்த தேச பக்தரான சோ. பாலகிருஷ்ணனை, வீரப்பனிடமிருந்து ராஜ்குமாரை மீட்டு வர அனுப்பவேண்டுகிறேன் என்று பழ. நெடுமாறன் கூறுகிறாரே?
ப: நல்லவேளை. கைதிகளை விடுவிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை, காட்டுக்குப் போய் ராஜ்குமாரை மீட்டு வரட்டும் என்று சொல்லாமல்விட்டாரே! அதுவரை சந்தோஷம்.
கே: வீரப்பனை மீட்டு வர தூதுவராக இனி நான் காட்டுக்குப் போகப் போவதில்லை என்று நெடுமாறன் அறிவித்த பிறகு, அவர் காட்டுக்குச் செல்லவேண்டும் என்ற ஆதரவு அதிகரித்து வருகிறதே?
ப: அவர் போக மாட்டேன் என்று கூறுவதே. இதற்காகத் தானே!
கே: வீரப்பன் படலம் எப்போது முடியும்?
ப: அவன் தப்பிச் செல்ல நேரம், காலம், இடம், அதற்கான பொருள், ஆயுத சப்ளை - போன்றவை தீர்மானிக்கப்பட்ட பிறகு - இந்த விவகாரம்முடியும் என்பது என் கருத்து.
கே: ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன - என நினைக்கும் சிலரைப் பற்றி ...?
ப: ராமன் இல்லாதததால் அப்படி நினைப்பவர்களும் இப்போது இல்லை. ராவணன் ஆண்டால் என்ன, கம்ஸன் ஆண்டால் என்ன என்று நினைப்பவர்கள்தான் இருக்கிறார்கள். அந்தமாதிரி ஒரு விரக்தி பலருக்கு ஏற்படுவது புரிந்து கொள்ளக் கூடியதே?
கே: புலிகள் விஷயத்தில் வைகோ இரட்டை வேடம் போடுவதாக, வாழப்பாடி கூறுகிறாரே?
ப: நான் ஒப்புக் கொள்ளவில்லை. மத்திய அரசுக்கு ஒரு வேடம்; புலிகளுக்கு ஒருவேடம் ; தமிழக மக்களுக்கு ஒரு வேடம் ; கட்சியினருக்கு ஒரு வேடம்.மொத்தம் நான்கு வேடங்கள் ஆகின்றன. இதை, இரட்டை வேடம் என்று சொல்வது - வேண்டுமென்றே வைகோவின் சாதனையை குறைத்துமதிப்பிடுவதாகும்.
கே: வரும் தேர்தலில் பா.ம.க. இரண்டாவது இடத்தைப் பெறும்என்று டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து கூறி வருகிறாரே?
ப: அதைப்பற்றி உமக்கென்ன? அந்த அளவுக்கு சீட் கேட்பேன் என்று அவர் சொல்லி வருகிறார். கவலைப்பட வேண்டியவர்கள் கருணாநிதியும்,ஜெயலலிதாவும். உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயம்.
கே: உமாபாரதி திரும்பவும் அமைச்சராக்கப்பட்டது பற்றி ...?
ப: மரியாதை போயிற்று ; மந்திரி பதவி கிடைத்தது.
கே: வாக்காளர் அடையாள அட்டையை கட்டாயப்படுத்துவதன் மூலம், கள்ள ஓட்டு போடப்படுவதைத் தடுக்க முடியுமா?
ப: முடியும். ஆனால் கள்ள அட்டை வினியோகம் ஒழுங்காக நடந்தால் முடியாது.
கே: ஜெயலலிதா பற்றி தங்களுக்கு புரிந்தது எது? புரியாதது எது?
ப: ஓரளவு புரிந்தது ஜெயலலிதா, சுத்தமாகப் புரியாதது அவருடைய அரசியல்.
கே: கறுப்பு, சிவப்பு கலர் பெரியாரும், அண்ணாவும் கொடுத்ததுதான்; ஆனால் இப்போது அது காவியோடு கலந்து மஞ்சளாகி விட்டது என்று கி.வீரமணிகூறியிருப்பது பற்றி ...?
ப: அதனால் என்ன? காவி, பின்னர் ஒரு சமயத்தில் கறுப்போடு சேர்ந்தால், மீண்டும் கறுப்பு, சிவப்பு ஆகி விடாதா? இப்போது அ.இ.அ.தி.மு,க, கறுப்பு -சிவப் பாக இருந்து, காவியோடு கலந்து மஞ்சளாகி மீண்டும் கறுப்பு - .சிவப்பு ஆகி விடவில்லையா?
கே: இலங்கை அரசுடன் நேரடியாகப் பேச்சு நடத்த பிரபாகரன் விரும்புவதாக, வெளி வந்திருக்கும் செய்திகள் பற்றி உங்கள் கருத்து என்ன?
ப: ஆட்களை சேர்க்கவும், ஆயுதம் பெருக்கவும், அடுத்த தாக்குதலை திட்டமிடவும் அவகாசம் தேவை -என்று பொருள் காண்க.












Click it and Unblock the Notifications