இலங்கைக்கு வருகிறது வயாகரா
கொழும்பு:
மலடு நீக்க மாத்திரையான வயாகரா இலங்கையில் விற்பனைக்கு வரவுள்ளது.
இலங்கை மருந்துக் கழகம், வயாகரா மார்க்கெட்டிங்கைத் துவக்கியுள்ளது. 25மில்லிகிராம் மற்றும் 50 மில்லி கிராம் அளவிலான மாத்திரைகள் விற்பனைக்குவிடப்படவுள்ளன.
25 மில்லிகிராம் மாத்திரை ஒன்று ரூ. 685 எனவும், 50 மில்லிகிராம் மாத்திரை ரூ. 800எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாக்டர்களின் பிரிஸ்கிரிப்ஷன்காட்டப்பட்டால் மட்டுமே இந்த மாத்திரைகள் வழங்கப்படும்.
அதிகாரப்பூர்வமாக இந்த மாத்திரை இன்னும் விற்பனைக்கு வராவிட்டாமும் கூட,ஆங்காங்கே ஒளிவுமறைவாக வயாகரா விற்பனை நடந்து கொண்டிருப்பதாகத்தெரிகிறது. இதற்கு ஒருவர் பலியும் ஆகி விட்டார். அதிக மாத்திரைகளைஉட்கொண்டதால் அவர் இறந்ததாகத் தெரிகிறது.
இலங்கைக்கு வயாகரா வருவதையொட்டி, அந்நாட்டு பாப் பாடல் குழு ஒன்றுக்குவயாகரா என்று பெயரிடப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications